உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து ஒருவர் பலி: 5 பேர் கதி என்ன

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து ஒருவர் பலி: 5 பேர் கதி என்ன

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் இடிந்து ஒருவர் உயிரிழந்தார். சிக்கி உள்ள 5 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது.ஹோரமவு அகரா பகுதியில் இன்று மதியம் கட்டடம் இடிந்து விழுந்தது. அப்போது 20 பேர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர், 14 பேரை பத்திரமாக மீட்டனர். ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளுக்குள் 5 பேர் சிக்கிக் கொண்டு உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.பெங்களூருவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இந்த கட்டடம் இடிந்து விழுந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
அக் 22, 2024 22:29

கட்டிட உரிமையாளர் ஒரு அரசியல்வாதி என்று செய்தி. சத்தியமாக அவர் தண்டிக்கப்படமாட்டார். நீதிமன்றத்துக்கு தேவை சாட்சி. அது மழை நீரில் அடித்துச்செல்லப்பட்டிருக்கும். ஆக கேஸ் குளோஸ்.


நிக்கோல்தாம்சன்
அக் 22, 2024 21:16

இந்த கட்டிடத்தை கட்டுபவர் பைராத்தி சுரேஷ் என்ற I.N.D.I காங் கூட்டணியின் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர் , கேஸ் நிக்கும் னு நினைக்கறீங்க ?


நிக்கோல்தாம்சன்
அக் 24, 2024 18:52

அவரோட பினாமி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை