வாசகர்கள் கருத்துகள் ( 1 )
லட்டு வாங்க கூட்ட நெரிசலில் சிக்கி மனித உயிர்கள் பலியாகாமல் இருந்தால் நல்லது.
பெங்களூரு: ம.ஜ.த., - எம்.எல்.சி., சரவணாவின் தொண்டு அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி நாளன்று, பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வினியோகிப்பது வழக்கம். அதேபோன்று இம்முறையும் லட்டுகள் தயாராகியுள்ளன.பெங்களூரின் பசவனகுடி, ஸ்ரீசாயி பார்ட்டி ஹாலில் தயாரான லட்டுகளை, நேற்று சரவணா பார்வையிட்டார். பின் அவர் அளித்த பேட்டி:வைகுண்ட ஏகாதசி நாளன்று, மஹா விஷ்ணுவின் சொர்க்க வாசல் திறக்கப்படுவதாக, ஹிந்து மதத்தில் நம்பப்படுகிறது. அன்றைய தினம் வெங்கடேஷ சுவாமியை தரிசிப்பது புண்ணியத்தை அளிக்கும்.பலருக்கும் திருமலை திருப்பதிக்கு சென்று, ஏழுமலையான தரிசிக்க வேண்டும், லட்டு பிரசாதம் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அனைவராலும் திருப்பதிக்கு செல்ல முடியாது. எனவே இவர்களுக்காக திருப்பதி போன்று, லட்டு பிரசாதம் வினியோகிக்கப்படும்.இரவு, பகல் பாராமல் 100 சமையல் ஊழியர்கள், ஒரு லட்சம் லட்டுகள் தயாரித்துள்ளனர். சுத்தமான நெய், முந்திரிப்பருப்பு, திராட்சை, கடலை மாவு பயன்படுத்தி, திருப்பதி போன்றே லட்டுகள் தயாரிக்கப்பட்டன.ஏகாதசி நாளன்று, லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
லட்டு வாங்க கூட்ட நெரிசலில் சிக்கி மனித உயிர்கள் பலியாகாமல் இருந்தால் நல்லது.