உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பார்லி. கூட்டுக்குழுவில் பிரியங்கா?

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பார்லி. கூட்டுக்குழுவில் பிரியங்கா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக ஆய்வு செய்யும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில், இடம்பெற வயநாடு எம்.பி., பிரியங்காவின் பெயரை காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் சட்ட திருத்த மசோதா என்பதால், விதிப்படி ஓட்டெடுப்பு நடந்தது. ஆதரவாக 269 பேர், எதிர்த்து 198 பேர் ஓட்டளித்தனர். பின், ஜே.பி.சி., என்றழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. இந்த குழுவில், இடம்பெறுவோரின் பட்டியலை வழங்கும்படி மத்திய அரசு கூறியிருந்தது. இக்குழுவில் அதிகபட்சம் 31 எம்.பி.,க்கள் இடம்பெறலாம். அதில் 10 பேர் ராஜ்யசபா எம்.பி.,க்கள் அடங்குவர்.இந்நிலையில், லோக்சபாவில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ்,வயநாடு எம்.பி., பிரியங்காவின் பெயரை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் சுக்தியோ பகத் சிங் ஆகியோரின் பெயர்களையும், அக்கட்சி பரிந்துரைத்து உள்ளதாக தெரிகிறது. திரிணாமுல் சாகேத் கோகாய் மற்றும் கல்யாண் பானர்ஜி உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அனில் தேசாய் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியில் அவரது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.ஆளும் பா.ஜ.,வுக்கு 240 எம்.பி.க்களும் . காங்கிரசுக்கு 99 எம்பிக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

RAMAKRISHNAN NATESAN
டிச 18, 2024 22:17

ஐம்பது வயதைக் கடந்தவர், ஒரு முக்கிய குடும்பத்தைச் சார்ந்தவர் ஒரு நடுநிலைப்பள்ளி மாணவியின் பொது அறிவைத்தான் பெற்றுள்ளார் ....


தத்வமசி
டிச 18, 2024 20:27

அந்த அம்மாவுக்கு இதை படித்து புரிந்து கொள்ள இயலுமா ? இல்லை தவெக தலைவர் போல வெறுமனே பிதற்றுவாரா ?


Sam
டிச 18, 2024 20:03

என்னடா காங்கிரஸுக்கு வந்த சோதனை? காங்கிரசில் பிரதிநிதிக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லையா? அல்லது நரசிம்ம ராவுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து கைகட்டி வாய் பொத்தி நிற்கும் அடிமைகளாக மாறி விட்டார்களா?


Nandakumar Naidu.
டிச 18, 2024 19:12

எதிர்ப்பை தவிர என்ன சொல்லப்போகிறார்?அந்த குழுவில் ஒரு உதவாக்கரை.


Sivagiri
டிச 18, 2024 19:03

எம்பி ஆகி முழுசா ஒரு மாசம் ஆகல ,


பல்லவி
டிச 18, 2024 17:22

வடக்கே உள்ள மக்கள் தான் இந்த நாட்டை ஆள தகுதி படைத்தவர்கள் என்பது சரியல்ல


veera
டிச 18, 2024 18:03

ஆதலால் அண்ணாமலைக்கு ஆதரவு கொடுங்கள்....இங்கு வேறு யாருக்கும் அந்ததகுதி இல்லை


Ramanujadasan
டிச 18, 2024 17:17

அங்கே சென்று கெக்கே பிக்கே என்று சிரித்து உளறி கொட்டும் . இதை தவிர இதனால் ஆக கூடியது எதுவும் இல்லை . அங்கே சென்று தான் வரைந்த குப்பைகளை ஏமாளிகள் தலைமேல் கோடிக்கணக்கான விலைக்கு கட்டவா முடியும் ?


nv
டிச 18, 2024 17:08

இவருக்கு எவராவது எழுதி கொடுத்தாலும் ஒழுங்கா படிக்க வராது, JPC என்ன கிழிக்க போகுது என்று பார்ப்போம்.


Anand
டிச 18, 2024 16:59

இதை எந்த லிஸ்டில் சேர்ப்பது?


Barakat Ali
டிச 18, 2024 16:53

கூட்டுக்குழு மீட்டிங்ல என்ன பையி கொண்டுபோவீங்க தாயி ?


சமீபத்திய செய்தி