உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா; லோக்சபாவில் டிச.,16ல் தாக்கல்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா; லோக்சபாவில் டிச.,16ல் தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா டிச.,16ல் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்கிறார்.லோக்சபா, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆராய்ந்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவினர் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இந்தாண்டு மார்ச் மாதத்தில் இந்தக் குழு தன் அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.இந்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பான மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா டிச.,16ல் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்கிறார்.இதற்காக, மூன்று சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டில்லி, ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இந்த மசோதாவும் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RAMAKRISHNAN NATESAN
டிச 14, 2024 15:42

அதென்ன திமிங்கிலம் ..... பல நாடுகளில் வாக்குச்சீட்டு முறைதான் அமலில் இருக்கு ன்னு கூவுறவன் ஒருத்தன் கூட ஏழு நாடுகளில் இந்த ஒரே தேர்தல் முறை இருந்தாலும் இதை ஆதரிக்கலையே .....


Sundar R
டிச 14, 2024 15:17

கார்ப்பரேட்களுக்கு வரிச்சலுகை கொடுத்தால் பொருட்களின் விலை குறையும். கோவிட்-19 வைரஸை ஒழிக்க ரத்தன் டாட்டா அவர்கள் 1500 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறார். பல கார்ப்பரேட்கள் பல இயற்கை பேரிடர் கோளில் பல நூறு கோடிகள் நன்கொடை வழங்கியிருக்கிறார்கள். சமீபத்திய வயநாடு மண்சரிவு பேரிடருக்காக கேரள அரசிடம் அதிமுக, காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு கோடியும், கம்யூனிஸ்ட்கள் பல லட்சக்கணக்கான ரூபாய்களை அவர்களுடய டெல்லி தலைமைக்கு அனுப்பி அவர்கள் கேரள அரசிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்திருக்கிறார்கள். திமுக தங்கள் கட்சிப் பணத்திலிருந்து எவ்வளவு கொடுத்தார்கள்? என்ற கேள்விக்கு தாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.


RAMESH KUMAR R V
டிச 14, 2024 14:29

ஜெய் ஹிந்த்


Sundar R
டிச 14, 2024 12:53

நம் நாட்டில் ஆட்சியாளர்களின் தவறான முடிவால் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் வீணாகிறது. பௌர்ணமி கூட மாதத்திற்கு ஒரு முறை தான் வரும். ஆனால் இடைத்தேர்தல்கள் சில சமயங்களில் மாதத்திற்கு இருமுறை வருகிறது. இதனால், மக்களுக்கும் சிரமம். மக்களுடைய வரிப்பணமும் பாழ். ஒரே நாடு. ஒரே தேர்தல் என்பதன் மூலம் மிச்சப்படுத்திய பணத்தை ஏழைகளின் நல்வாழ்வுக்கான பல திட்டங்களை தீட்டலாம். ஒரே நாடு ஒரே தேர்தல் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம் என்னவென்றால், நம் நாட்டில் எங்கெங்கெல்லாம் அரசு திட்டத்திற்கு பல கோடி ரூபாய்களை செலவழிக்கிறதோ, அதையெல்லாம் குறைந்த செலவில் செய்து முடித்து மக்களின் வரிப்பணத்தை மிச்சப்படுத்தி, அந்த பணத்தை வைத்து நம் நாட்டையும், நாட்டு மக்களையும் முன்னேற்றுவதற்காக மட்டுமே செலவிட வேண்டும்.


saiprakash
டிச 14, 2024 14:51

ஐயா அறிவாளி ,கார்பொரேட்களுக்கு தள்ளுபடி பண்ணியது எத்தனை லட்சம் கோடின்னு தெரியுமா


Dharmavaan
டிச 14, 2024 10:59

திருட்டு தேச விரோதிகளுக்கு இது எரிச்சல் தரும்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 14, 2024 13:50

அதன் அடிமைகளுக்கும் .....


Kannan
டிச 14, 2024 10:57

கிரேட் வாழ்த்துக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை