உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.500 கோடி கொடுப்பவர்களே முதல்வராகிறார்கள்; சித்துவின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

ரூ.500 கோடி கொடுப்பவர்களே முதல்வராகிறார்கள்; சித்துவின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: 'முதல்வர் இருக்கையில் அமர்வதற்காக கொடுக்க ரூ.500 கோடி பணம் எங்களிடம் இல்லை. பெட்டி நிறைய பணம் கொடுப்பவர் தான் முதல்வர் ஆகிறார்கள்,' என்று பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி கவுர் குற்றம்சாட்டியுள்ளார்.பஞ்சாப் சட்டசபைக்கு 2027ம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆம் ஆத்மி அரசின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவியுமான நவ்ஜோத் கவுர் சித்து நேற்று கவர்னர் குலாப் சந்த் கட்டாரியாவை சந்தித்து பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கணவர் சித்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது; நாங்கள் எப்போதும் பஞ்சாப் மற்றும் பஞ்சாபி மொழிக்காக தான் பேசுவோம். முதல்வர் இருக்கையில் அமர்வதற்காக கொடுக்க ரூ.500 கோடி பணம் எங்களிடம் இல்லை. பெட்டி நிறைய பணம் கொடுப்பவர் தான் முதல்வர் ஆகிறார்கள். எந்தக் கட்சியாவது அவருக்கு அதிகாரம் கொடுத்தால், அவர் நிச்சயமாக பஞ்சாப்பை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார். பஞ்சாப் காங்கிரஸில் ஏற்கனவே உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. ஏற்கனவே, 5 தலைவர்கள் முதல்வர் பதவிக்காக போட்டியிட்டு வருகின்றனர். அவர்கள் காங்கிரஸைத் தோற்கடிப்பதில் உறுதியாக உள்ளனர். கட்சியின் தலைமை இதைப் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். அதேவேளையில், சித்து காங்கிரஸ் தலைமையுடனும், கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளார். ஆனால், உட்கட்சி பூசலுக்கு மத்தியில் அவர்கள் சித்துவை முன்னேறி வர விடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.மீண்டும் சித்து பாஜவில் இணைவாரா? என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. காங்கிரஸ் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், சித்து மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புவார். ஏனெனில், தற்போது அவர் நன்கு பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார், என்று கூறினார்.முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான சித்து, கடந்த பல மாதங்களாக கட்சியின் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபடவில்லை. 2024ல் நடந்த லோக்சபா தேர்தலிலும் அவர் பிரச்சாரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சிட்டுக்குருவி
டிச 07, 2025 21:02

ஐயா சித்து அவர்களே நீங்கள் உலகிலேயே மிக சிறந்த மனிதர் .உங்களின் விளையாட்டுக்காக இல்லை .நீங்கள் செய்யும் அரசியலுக்காக இல்லை .தங்களின் அன்பான மணைவியை எமன் பிடியிலிருந்து தங்களின் விடாமுயற்சியினால் மீட்டெடுத்ததற்கு.வேறு எவருக்காவது இந்த அளவு நம்பிக்கையும் ,மனவலிமையும் இருந்திருக்குமா என்று தெரியவில்லை .இதுவே வேறு எந்தநாட்டிலாவது நடந்த்திருந்தால் குறிப்பாக அமெரிக்காவில் நடந்திருந்தால் ஒரு மிக பெரிய ஆராய்ச்சியாக மாறியிருக்கும் .இது பெரிய விஞான பேசுபொருளாக மாறியிருக்கும் .நம்மிடையே மிகப்பெரிய உலகில் எங்குமே இல்லாத பொக்கிஷங்கள் கொட்டிக்கிடைக்கின்றன .அதை நம்மால் இன்னும் வகைப்படுத்தி விஞானரீதியாக பயன்படுத்த தெரியவில்லை . நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி உங்கள் விஞ்ஞானத்தை மேம்படுத்தி கேன்சருக்கு விடைகொடுக்கும் உத்தியை ஆயுர்வேததோடு கண்டறிந்து மக்களுக்கு சேவைசெய்யவேண்டும் .அதுவே உங்களை சான்றோர் ஆக்கும் .உங்கள் மனைவியை மருத்துவமனையில் இறக்கும்தருவாயில் இருந்ததை பார்த்து இப்போது அரசியல் மேடைக்கு வந்ததை பார்ப்பது சிறப்பாக உள்ளது .


VSMani
டிச 07, 2025 18:22

500 கோடி கொடுத்து முதல்வரானால் எவ்வளவு கோடி பணத்தை ஆட்டை போடுவார்கள் பஞ்சாபிலே அப்படி என்றால் தமிழ்நாட்டில் எவ்வளவு கோடி பணத்தை ஆட்டை போடுவார்கள்


Sivagiri
டிச 07, 2025 17:22

அப்டியா , இது தெரிஞ்சா , திராவிட தீயசக்தி , எல்லா ஸ்டேட்டையும் புடிச்சிரலாமே , 500 சி-எல்லாம் ஜுஜுபி . . . எங்க கொண்டு வரணும் அட்ரசை சொல்லுங்கோ . . .


Field Marshal
டிச 07, 2025 15:53

சித்து பிஜேபி கட்சியின் தீவிர ஆதரவாளர் ... காங்கிரசில் சேர்ந்து கட்சியை குழி தோண்டி புதைக்கும் வேலையே சிறப்பாக செய்கிறார்


Kasimani Baskaran
டிச 07, 2025 15:15

முதல்வருக்கு முன்பணம். மோசமானதாக இருக்கும் போலவே.


Perumal Pillai
டிச 07, 2025 15:13

யாருக்கு 500 கோடி கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை . இவர்கள் காங்கிரஸ் இல் இருப்பதால் அந்த 500 கோடியும் சோனியா காந்திக்கு ஆக இருக்கலாம் என நம்பலாம் .