உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆன்லைன் சூதாட்ட வழக்கில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா மற்றும் முன்னாள் எம்பி மிமி சக்ரவர்த்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.ஆன்லைன் சூதாட்ட செயலிகள் வாயிலாக சட்டவிரோதமாக, 2,000 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக நாடு முழுதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 'பாரிமேட்ச்' என்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு பணமோசடி நடந்ததாக விசாரணை நடந்து வருகிறது.ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி , பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. செப்.,16ம் தேதி டில்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மிமி சக்ரவர்த்திக்கும் இதே வழக்கில் செப்டம்பர் 15 ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை