உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆன்லைன் ரம்மி விளம்பரம்: நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

ஆன்லைன் ரம்மி விளம்பரம்: நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.சட்ட விரோத பந்தயங்களை ஊக்குவித்ததாக நடிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சட்ட விரோதமாக பந்தயம் நடத்தும் இணையதளங்களை பிரபலங்கள் ஆதரிப்பதால், பயனர்கள் ஈர்க்கப்பட்டு, அதில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பணத்தை இழப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இத்தகைய விளம்பரங்களில் நடித்த அமலாக்கத்துறை நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவர கொண்டா, ராணா டகுபதி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது.தற்போது அவர்களை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நடிகர் ராணா டகுபதி, ஜூலை-23ம் தேதி, பிரகாஷ் ராஜ் ஜூலை 30ம் தேதியும், விஜய் தேவரகொண்டா ஆக.,6 ம் தேதியும் லட்சுமி மஞ்சு ஆகஸ்ட் 13ம் தேதியும் அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Padmasridharan
ஜூலை 22, 2025 10:17

நடிகைய தொடாம நடித்தவர் T.ராஜேந்தர் என்று சொல்வார்கள். ஆனால் நடித்தால்தான் முத்தக்காட்சியே கிடைக்கும் அதிலேயே கிடைப்பதனால் விவகாரத்தும் எளிதாக கிடைக்குமென்று நடிக்கச் செல்கிறார்கள். இதில் புகைபிடித்தலும் மது அருந்துதலும் கூட, குடித்தவனுக்கென்று ஒரு பாடல் வேறு. இதை ஊக்குவிப்பதில் நடிகர்களின் பங்கு நிறைய இருக்கிறது. சட்டம் அங்கேயே பாய்ந்திருக்கலாம். தற்பொழுது அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறது.


சுந்தர்
ஜூலை 22, 2025 08:32

பங்கு பெற்ற அனைவருக்கும் சம்மன் அனுப்ப வேண்டும்


M Ramachandran
ஜூலை 22, 2025 01:23

தீவிரவாதிகளின் கைக்கூலி + சுயநல காழ்புணர்ச்சிய காட்டும் நடிகர்


Varadarajan Nagarajan
ஜூலை 21, 2025 22:30

எம்ஜிஆர் சிவாஜி போன்ற நடிகர்கள் படங்களில் புகைபிடித்தல், மது அருந்துதல், கற்பழித்தல், அரைகுறை ஆடையில் கவர்ச்சிகரமாக நடித்தல் போன்ற காட்சிகள் இடம்பெறுவதை பலகாலம் தவிர்த்தனர். பிற்காலத்தில் ஒருசில படங்களில் ஒருசில காட்சிகள் இடம்பெற்றன. ஆனால் தற்கால முன்னணி நடிகை நடிகர்கள் பணத்திற்க்காக விளம்பர தூதர்களாக இவை அனைத்திலும் தோன்றுகின்றனர். இவற்றை பார்க்கும் இளைங்கர்கள் தவறுசெய்ய ஈர்க்கப்படுகின்றனர்.


K.n. Dhasarathan
ஜூலை 21, 2025 21:04

இணைய தளங்களில் ரம்மி விளம்பரங்களில் நடித்ததற்கே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதே இந்த சூதாட்டங்களின் முதலாளிகளை கொண்டாடி, அவர்களை ராஜ் பவனுக்கு அழைத்து, அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்க ஒப்புக்கொண்ட கவர்னரை என்ன ஏது என்று கேட்கமாட்டீர்களா ? அதுவும் அந்த சூதாட்டங்களை தடை செய்ய கோரிக்கை வைத்த அமைச்சருக்கு அனுமதி தராமல் மூன்று நாள் கழித்து அனுமதி கொடுத்த, புண்ணியவான், சூதாட்ட முதலாளிகளுக்கு உடனடியாக சந்திக்க வரச்சொல்லி அனுமதி கொடுத்ததும் இதே கவர்னர்தான், அவரை என்ன செய்யும் இந்த அமலாக்கத்துறை? ஒருவேளை ஏதும் விருது கொடுக்குமோ ? அல்லது தேசிய விருதுக்கு பரிந்துரை பண்ணுமோ ? யார் கண்டார்கள் ? சில விருதுகள் அப்படித்தான் தரப்பட்டன, இல்லையென்று மறுக்க முடியாது. நடந்ததுதாநே . .


Rajan A
ஜூலை 21, 2025 20:15

வடக்கு நடிகர்களும் விளம்பரங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் மீதும் சட்டம் பாய வேண்டும்


Veera
ஜூலை 21, 2025 19:38

Fortunately Sarathkumar joined BJP.


GMM
ஜூலை 21, 2025 19:11

ரம்மி போன்ற சட்ட விரோத பந்தயம் நடத்தும் இணையதளங்களை முடக்கவும். நடிகர்கள் வெறும் அம்பு. சட்ட விரோதம் என்றால், வழக்கு செலவுகள் கட்டண அடிப்படையில் வசூலிக்க வேண்டும்.


Svs Yaadum oore
ஜூலை 21, 2025 19:05

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், ......ஆனால் பெருசா என்னமோ ரொம்ப யோக்கியன் மாதிரி பேசுவார் ...தூக்கி உள்ளே போடனும் ..


தாமரை மலர்கிறது
ஜூலை 21, 2025 19:00

ஆன் லைன் ரம்மியால் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். அதற்காக பிரகாஷ்ராஜை ஜெயிலில் அடைப்பது அவசியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை