உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை கூட்ட நெரிசலில் தவறிய ஊட்டி சிறுமி! தந்தையுடன் சேர்க்க உதவிய அடையாள பட்டை

சபரிமலை கூட்ட நெரிசலில் தவறிய ஊட்டி சிறுமி! தந்தையுடன் சேர்க்க உதவிய அடையாள பட்டை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்; சபரிமலைக்கு தந்தையுடன் வந்திருந்த ஊட்டி சிறுமி காணாமல் போன நிலையில், போலீசாரின் உதவியுடன் மீட்கப்பட்டார். சபரிமலை சீசனான தற்போது தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், குழந்தைகள் கைகளில் பட்டை ஒன்று அணிவிக்கப்படுகிறது. அவசரம் அல்லது ஆபத்து காலத்தில் யாரை தொடர்பு கொள்வது என்பது பற்றி தெரிந்து கொள்ள அதில் தொலைபேசி எண் பதிவிடப்பட்டு இருக்கும்.இந் நிலையில் சபரிமலைக்கு ஊட்டியைச் சேர்ந்த ஒருவர் தமது குழந்தை சிவார்த்திகா என்பவருடன் வந்திருந்தார். சபரிமலை வழித்தடமான பாப்பந்ததில் கூட்ட நெரிசல் காரணமாக, அவர் தந்தையிடம் இருந்து தவறிவிட்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டிருந்த தருணத்தில் சிறுமி சிவார்த்திகா அழுது கொண்டிருப்பதை அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த அக்சய் என்பவர் கவனித்தார். தந்தையுடன் வந்திருந்த அவர், வழிதவறியதை கண்டு, சிறுமியின் கையில் இருந்த அடையாள பட்டையில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டனர்.அவரிடம் விபரத்தை தெரிவித்த அக்சய், சிறுமி தம்மிடம் இருக்கும் விபரத்தை தெரிவித்தார். சிறிதுநேரத்தில் தந்தையும் அங்கு வந்துவிட அவரிடம் சிறுமி சிவார்த்திகாவை அக்சய் ஒப்படைத்தார். நன்றி கூறிய தந்தையும், மகள் சிவார்த்திகாவை தம்முடன் அழைத்துச் சென்றார்.இதுவரை 10 வயதுக்குட்பட்ட 5000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காவல்துறையினர் மணிக்கட்டில் பட்டை கட்டியுள்ளனர். தினமும் குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோருக்கு அடையாள பட்டைகள் வழங்கப்படுகிறது என்றும், பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Thavam Muthu
டிச 08, 2024 14:34

Ayyappan manithar moolam help seithullar


Thavam Muthu
டிச 08, 2024 14:33

ஐயப்பன் சேர்த்து வைத்துள்ளார். ஐயப்பன் மனிதர் மூலம் ஹெல்ப் panniullar


Panangudiyan
டிச 07, 2024 12:51

ID கார்டு, பட்டை போன்றவை தொலைந்துவிட வாய்ப்பு உள்ளது, சிறுவர் சிறுமியர் மற்றும் நமது வீடுகளில் உள்ள நினைவு தவறிய பெரியவர்களின் வலது அல்லது இடது மணிக்கட்டில் மொபைல் நம்பரை Temporary Tattoo முறையில் பச்சை குத்தி விடலாம்


Prasad VV
டிச 07, 2024 06:26

குழந்தையுடன் வரும் பெற்றோருக்கும் பட்டை கட்டப்பட வேண்டும், அப்போது தான் இருவரையும் மேட்ச் செய்யமுடியும்.


நிக்கோல்தாம்சன்
டிச 07, 2024 04:26

நல்ல முயற்சி , அக்ஷய் மற்றும் அவரோடு பணியாற்றிய மக்களுக்கு இயற்கை துணையிருக்கட்டும்


m.n.balasubramani
டிச 06, 2024 21:40

நன்றி ஐயா நன்றி . வாழ்த்துக்கள் .


KayD
டிச 06, 2024 21:23

Thank Ayyappa Iphone Ayyappa ..Android Ayyapa for all his mercies .. குழந்தை miss ஆனாலும் miss ஆகிடாமல் காத்த காவலர்களுக்கு மிக்க நன்றி. குழந்தை சார்பாக அந்த காவலருக்கு அன்பு kiss அனுப்பி விடுங்கள் ..


முக்கிய வீடியோ