உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் சிந்துார்: சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு அதிகாரி கைது

ஆப்பரேஷன் சிந்துார்: சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு அதிகாரி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போடாட் : நம் பாதுகாப்பு படையினரின் 'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றி ஆட்சேபத்துக்குரிய கருத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட அரசு அதிகாரியை குஜராத் போலீசார் கைது செய்தனர்.பயங்கரவாதத்துக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' ராணுவ நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டுகளும், விமர்சனங்களும் எழுந்தன. இதில், தேச ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன்படி, குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் உள்ள துருபனியா கிராம பஞ்சாயத்து அதிகாரி கிரிபால் படேல், 27, என்பவர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஆப்பரேஷன் சிந்துார் பற்றி ஆட்சேபத்துக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார்.இதை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்து, படேலின் சமூக வலைதள பதிவை நீக்கியதுடன், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'தேச ஒற்றுமைக்கு தீங்கு விளைவிப்பதும், இந்திய குடிமக்களிடையே அச்சத்தை உருவாக்கும் வகையில் கிரிபால் படேல் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அவரை கைது செய்துள்ளோம். இதேபோல் கருத்து பதிவிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

angbu ganesh
மே 14, 2025 11:19

குருமா வை கைது செய்யுங்கள் எங்க நாட்டு உப்ப தின்னுட்டு எதிரி நாட்டுக்கு விஸ்வாசமா இருக்கறான்


தியாகராயன்
மே 14, 2025 10:29

தமிழ் நாட்டில் பல பேர் இன்னும் கூட பேசுகிறார்கள் .


raghavan
மே 14, 2025 09:52

சீமான் னு ஒருத்தன் இந்த மாதிரி பேசுறான் கொஞ்சம் கவனியுங்க.


chennai sivakumar
மே 14, 2025 08:35

நான் ஏற்கனவே பல முறை எழுதி உள்ளேன் அந்தமான் மாதிரியை விட மிக பெரிய சிறை சாலையை நிறுவ வேண்டும். இந்த மாதிரி ஆட்களையெல்லம் அங்கே கொண்டு தள்ளி விட வேண்டும். அதுதான் லாயக்கு.


Rajasekar
மே 14, 2025 08:04

தமிழக மற்றும் மத்திய அரசுகள் ஏன் சுந்தரவள்ளி, சீமான் & திருமாவளவன் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. எத்துனை முகநூல் பதிவுகள் நமது பிரதமர் மற்றும் நமது வெளியுறவு துறை அமைச்சர், நமது இராணுவத்தை மட்டும் தட்டும் வகையில் உள்ளன.


சந்திரன்
மே 14, 2025 07:53

சீமான் என ஒருத்தன் இப்படித்தான் பேசி திரியறான் அவனை கொஞ்சம் கவனியுங்கள்


thamil selvan arivudai nambi
மே 14, 2025 06:59

இவனை சுட்டு தள்ளுங்கள்


c.mohanraj raj
மே 14, 2025 06:48

வேலையை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும் கைது செய்து சோத்துக்கு பிச்சை எடுக்க விட வேண்டும் அப்பொழுதுதான் தெரியும் நம் நாட்டின் அருமை


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 14, 2025 06:29

அவனை எல்லையில் நிறுத்துங்க ....


ramesh
மே 14, 2025 06:05

கடுமையான நடவடிக்கை எடுங்கள், தேச விரோதிகளை . தாய் நாட்டிற்கு விசுவாசம் இல்லாதவர்கள் நாட்டில் வாழ தகுதியற்றவர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை