உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேரு மக்களுக்கு ஏற்படுத்திய காயங்கள் ஆறவில்லை: அசாமில் பிரதமர் மோடி பேச்சு

நேரு மக்களுக்கு ஏற்படுத்திய காயங்கள் ஆறவில்லை: அசாமில் பிரதமர் மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கவுகாத்தி: ''1962ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது ஜவஹர்லால் நேரு அசாம் மக்களுக்கு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை'' என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.அசாம் மாநிலத்தில் ரூ.18,530 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தாராங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: இந்தியாவில் வேகமாக வளரும் மாநிலங்களில் அசாமும் ஒன்று; ஒரு காலத்தில் வளர்ச்சிக்காக போராடிய இந்த மாநிலம் இன்று 13% வளர்ச்சியைக் கொண்டுள்ளது. பாரத ரத்னா விருது பெற்றவரும், புகழ்பெற்ற பாடகரும், இசையமைப்பாளருமான பூபன் ஹசாரிகாவை காங்கிரஸ் அவமதித்ததில் நான் வேதனை அடைகிறேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=349jtjd5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வளர்ச்சி

பூபன் ஹசாரிகா போன்ற அசாமின் சிறந்த மகன்களின் கனவுகளை நனவாக்க பாஜவின் இரட்டை இன்ஜின் அரசு உறுதி பூண்டுள்ளது. ஆசிர்வாதத்தால் ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றது. 1962ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது ஜவஹர்லால் நேரு அசாம் மக்களுக்கு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை. அசாம் மாநிலத்தின் கலாசாரத்தை பாதுகாக்கவும், வளர்ச்சியை உறுதி செய்யவும் பாஜ அரசு முடிவு செய்து இருக்கிறது.

ஆறு பாலங்கள்

வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை அடைவதில் வடகிழக்கு மாநிலங்கள் பெரும் பங்கு வகிக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. காங்கிரஸ் பல தசாப்தங்களாக அசாமில் ஆட்சி செய்தது. ஆனால் பிரம்மபுத்ரா நதியின் மீது 3 பாலங்களை மட்டுமே கட்டியது, அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் ஆறு பாலங்களைக் கட்டினோம்.

தேசவிரோத சக்தி

உங்கள் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்காக 'சுதேசி' பொருட்களை (இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்) வாங்குங்கள். இந்திய ராணுவத்தை ஆதரிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஊடுருவல்காரர்களையும், தேசவிரோத சக்திகளையும் காங்கிரஸ் பாதுகாக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

அப்பாவி
செப் 15, 2025 11:15

இன்னிக்கி வாய் கிழியுது.


செல்வேந்திரன்,அரியலூர்
செப் 15, 2025 14:09

உனக்குதான் பல்லே இல்லையே


venugopal s
செப் 14, 2025 23:28

இன்னுமா இவர் பேச்சை நம்புகின்றனர்? கொடுமை!


vadivelu
செப் 15, 2025 07:03

கண்டிப்பாக நம்ப கூடாது என்று ஒரு 30 கோடி மக்கள் இருக்கிறார்கள். மதவெறி, பதவி போன சோகம், தனிப்பட்ட இழப்பு இந்த 30 கோடி மக்களை அவர் என்ன சொன்னாலும் நம்ப மறுக்கிறது.


Sakthi,sivagangai
செப் 15, 2025 07:55

உன்னைப் போன்ற அறிவிலிகள் தத்தியின் பேச்சை நம்பும் போது இவரது உண்மையான பேச்சை நம்பாமல் எப்படி இருக்க முடியும்?


Tamilan
செப் 14, 2025 21:20

நேருவால்தான் நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது .


SUBBU,MADURAI
செப் 14, 2025 23:21

அதனால்தான் உன்னைப் போன்ற மூர்க்கன்கள் போலி பெயரில் வலம் வந்து கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் கண்டிப்பாக வெகு விரைவில் நீங்கள் எல்லாம் உங்கள் டொப்பிள் கொடி நாட்டுக்கு அடித்து விரட்டப் படுவது உறுதி...


Vasan
செப் 14, 2025 21:20

As per Vastu also, extension on North East brings prosperity. North East should never get truncated.


Mariadoss E
செப் 14, 2025 20:29

முந்தைய எல்லா அரசையும் குறை சொல்வது எல்லா கட்சியும் செய்வது தான் அனைவரும் மனிதரே புனிதர் அல்ல மோடியும் அதற்கு விதிவிலக்கு அல்ல....


Mariadoss E
செப் 14, 2025 20:26

நேரு இல்லாமல் இந்தியா இல்லை....


vadivelu
செப் 15, 2025 07:05

அதற்காக அவரும் தவறு செய்து இருக்கிறார் என்று சொல்லவே கூடாதா?


R. SUKUMAR CHEZHIAN
செப் 14, 2025 19:13

நேருவின் சாதனைகளை தெரிந்துகொள்ள நேருவின் நேரடி உதவியாளர் எம்.ஓ.மதாய் எழுதிய புத்கத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


R. SUKUMAR CHEZHIAN
செப் 14, 2025 19:01

Nehru is Indian prime minister by accident.


NALAM VIRUMBI
செப் 14, 2025 17:49

நேரு செய்த அக்கிரமங்கள் கணக்கில் அடங்காது. திராவிஷ கொத்தடிமைக் கூட்டம் அதைப் பற்றி தெரியாதது போல் நடிக்கும். சுமார் 50 ஆண்டுகள் காங்கிரசு தான் அஸ்ஸாமை ஆட்சி செய்தது. உண்மையான வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் தான் அந்த மாநிலம் பெற்றுள்ளது. நான் 2 வருடங்களுக்கு முன்பு அஸ்ஸாம் சென்ற போது நேரில் கண்டேன். வங்கதேச வந்தேறிகள் அங்கு அக்கிரமம் செய்கிறார்கள். அவர்களுக்கு காங்கிரசு காவடி தூக்குது கேவலம்.... பதவிக்காக தேசத்தை விற்கும் காங்கிரசு ஒழிய வேண்டும்.


GMM
செப் 14, 2025 17:16

நேரு அசாம் மக்களுக்கு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை. இந்திரா பொற்கோவில் நடவடிக்கை பஞ்சாப் மக்கள் காயம் ஆறவில்லை. இந்திரா வங்கதேச ராணுவ நடவடிக்கையில் இழப்பை ஈடு செய்யவில்லை. அதுபோல் ராஜீவ் இலங்கையில் இந்திய ராணுவ வீரர்கள் இழப்பை ஈடு செய்யவில்லை. ராகுல் மூலம் உள்நாட்டு இழப்பு . இருந்தும் காங்கிரஸ் எதிர்க்கட்சி. ? மக்கள் திருந்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை