உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்; நன்றி சொன்னார் கிரண் ரிஜிஜூ!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்; நன்றி சொன்னார் கிரண் ரிஜிஜூ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷணனுக்கு ஓட்டளித்த எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி தெரிவித்தார்.நேற்று நடந்த துணை ஜனாதிபதி தேர்தல் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், 452 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இண்டி கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 ஓட்டுகளை பெற்றார்.வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷணனுக்கு ஓட்டளித்த எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி தெரிவித்துக் கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது; துணை ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடத்தப்பட்டது. ஓட்டுப்பதிவு மிகவும் ரகசியத்தன்மையுடன் நடந்தது. மேலும், பல எதிர்க்கட்சி எம்பிக்களும் என்டிஏ வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்துள்ளனர். அவர்கள் தங்கள் மனசாட்சியின் குரலைக் கேட்டு ஓட்டளித்திருப்பதைக் காட்டுகிறது. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்த அனைத்து என்டிஏ எம்பிக்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
செப் 10, 2025 19:39

விடியல் தலைவர் சொல்லியும் கேட்காமல்...இந்தி கூட்டணி ஆளுக்கு ஓட்டு போடாமல்..... தமிழருக்கு ஓட்டு போட்டு இருக்கிறார்கள் போல் தெரிகிறது..... அந்த தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்.


பேசும் தமிழன்
செப் 10, 2025 19:26

இண்டி கூட்டணி ஆட்களுக்கு இந்த கேவலம் தேவையா..... கூட்டணியில் இருக்கும் ஆட்களே உங்களுக்கு ஓட்டு போட மாட்டேன்கிறார்கள்..... ஆமாம் அந்த பலி கடா என்னவானது.... தோல்வி என்று தெரிந்தும் போட்டியிட்ட அவரது தைரியத்தை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.


D.Ambujavalli
செப் 10, 2025 18:38

தேச நலனைத் தங்கள் குறுகிய கட்சியுடன் அடக்கிக்கொள்ள விரும்பாத சில எம். பிக்களும் இருக்கிறார்கள்


KOVAIKARAN
செப் 10, 2025 17:22

செல்லாத வோட்டுப்போட்ட 15 MP பிக்களும் I.N.D.I. கூட்டணியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கவேண்டும். அந்த 15 பேருக்கும் ரெட்டி அவர்களுக்கு ஓட்டுப்போட விரும்பியிருக்க மாட்டார்கள். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வோட்டுப்போட்டால் தெரிந்துவிடும் என்பதால், அவர்கள் செல்லாத வோட்டுக்காளாக போட்டிருப்பார்கள். இதுவே என் அனுமானம்,


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 10, 2025 15:54

செல்லாத ஓட்டு போட்ட 15 எம்பி களும் பதவியை பறித்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். வோட்டு போட தெரியாதவர் எப்படி எம்பியாக மக்களுக்கு நல்லது செய்வார். இனி இவர்கள் எம்பி எம்எல்ஏ ஆக நிரந்தர தடை விதிக்க வேண்டும். அதேபோல் வாக்கெடுப்பை புறக்கணித்த எம்பிக்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இனி எம்பி எம்எல்ஏ ஆக நிரந்தர தடை விதிக்க வேண்டும்.


raja
செப் 10, 2025 13:33

தமிழர் என்ற நல் எண்ணத்தில் திருட்டு திராவிட கட்சியிலுள்ள அந்த 14 பேர் போட்டு இருப்பாங்க.. விடுங்க ஜி...


M. PALANIAPPAN, KERALA
செப் 10, 2025 11:34

கூட்டத்தில் சில நல்ல குள்ளநரிகள்


Pandi Muni
செப் 10, 2025 12:23

திருடர் கூட்டத்தில் சில நல்ல மனிதர்கள்


சசிக்குமார் திருப்பூர்
செப் 10, 2025 12:39

மொத்த இன்டி கூட்டமும் குள்ளநரிகள் தான் அதிலும் மனம் திருந்திய நபர்கள்


சமீபத்திய செய்தி