உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் பேரணி சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் தடுத்து நிறுத்தம்; ராகுல் உள்ளிட்டோர் கைது

டில்லியில் பேரணி சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் தடுத்து நிறுத்தம்; ராகுல் உள்ளிட்டோர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, டில்லியில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தியதால், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.லோக்சபா தேர்தல் உள்பட அதன்பின் நடந்த மாநில சட்டசபை தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டினார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என அடுக்கடுக்கான புகார்களை கூறி, ஆவணங்களை வெளியிட்டார். அவரது இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=odhbyj45&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விவகாரத்தில் ராகுலுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகளும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததைக் கண்டித்து தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி நடத்த இண்டி கூட்டணி கட்சியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. போலீசாரின் தடையை மீறி பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து நிர்வாச்சன் சதானில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியை தொடங்கினர். திமுக உள்பட சுமார் 25 கட்சிகளைச் சேர்ந்த 300 எம்பிக்கள் கலந்து கொண்டனர். ஆனால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆவேசமடைந்த பிரியங்கா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்பிக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பீஹார் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் செய்வதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சமாஜ்வாதி கட்சி எம்பி அகிலேஷ் யாதவ், தடுப்புகளின் மீது ஏறி குதித்து சென்றார். தமிழக எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் தடுப்புகள் மீது ஏறி அமர்ந்து முழக்கமிட்டனர். இதனால் தலைநகர் டில்லியில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Sivakumar
ஆக 11, 2025 21:22

நீங்க ராணுவ ஆட்சி கேட்டா , அது நோ other option . இந்திரா காந்தி emergency கொண்டுவந்தா , அது அடக்குமுறைனு 50 ஆண்டு நினைவு எல்லாம் கொண்டாடி உசுப்பேத்துவீங்க. நல்ல நியாயம் .


MARUTHU PANDIAR
ஆக 11, 2025 21:50

அப்போது இன்று இருப்பதை போல வித விதமான டாப் டு பாட்டம் அந்நிய கைக்கூலிகளும் ஒயிட் காலர் கிரிமினல்களும் எந்த பதவியிலும் இல்லை. சீனாவுடன் எவரும் ரகசிய கூட்டணி வைக்க வில்லை. காமராஜர், ஜெயப்ரகாஷ் நாராயண், நிஜலிங்கப்பா போன்ற தலைவர்கள் நாட்டு விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்தது மற்றும்அளவற்ற தியாகம் புரிந்தவர்கள். வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். பதவி வெறி அற்றவர்கள். அந்நிய சக்திகளிடம் விலை போகாதவர்கள். இண்றைக்கு அப்படியா?


Sivakumar
ஆக 11, 2025 22:17

யாரு அந்நிய கைக்கூலி ? உங்கள் மதவாத சித்தாந்தத்தை ஏற்கவிட்டால் இப்படி ஒரு பழியை சுமத்துவது பாகிஸ்தான் Blasphemy law மாதிரி பிற்போக்கான முட்டாள்தனமான மனநோய்


vivek
ஆக 12, 2025 03:32

நீ புது அலுமினிய தட்டா சேலம் சிவகுமார்


Rathna
ஆக 11, 2025 20:21

தேர்தல் கமிஷன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில், பீகார் வாக்காளர் பட்டியலில் பர்மா, நேபாளம், பங்களாதேஷிகள் ஆயிரக்கணக்கானோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் சொல்லி உள்ளது. இதில் பாதி பேர் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னால் வந்து தங்கி பணத்தை வாங்கி கொண்டு வோட்டு போட்டு விட்டு திரும்ப செல்வதாக கேள்வி.


kumarkv
ஆக 11, 2025 19:18

Instead of arreating people like him, just make them to sit in platform and leave. it is more useful to catch some street dog and put in a cage to protect the public instead putting people like him.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 11, 2025 19:04

டெல்லியில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு. டெல்லி காவல்துறையின் இன்றைய உடனடி நடவடிக்கையை வரவேற்கிறோம்.


MARUTHU PANDIAR
ஆக 11, 2025 18:54

இந்த உதவாக்கரை எப்பொழுது நாட்டுக்காக உருப்படியா ஏதாவது செய்திருக்கான்? அவன் பின்னால் ஒரு உதவாக்கரை கூட்டம். இந்த மூன்றரை வருடமும் நாட்டை ஒவ்வொரு நாளும் சீர்குலைக்க வேண்டும் என்பதே இவனது எஜமானனின் ஆணை. இந்த நாட்டுக்கு ஜனநாயகம் வேலைக்கு ஆகாது. ராணுவத்துக்கு இப்பொழுது இருக்கும் மூடில் யோசிக்காமல் ராணுவ ஆட்சியை தொடங்க வேண்டும். இல்லையேல் காலம் கடந்து விடும். அந்நிய கைக்கூலிகளால் நாடு சின்னாபின்னமாகி விடும் என்று கூறுகிறார்கள்.


தாமரை மலர்கிறது
ஆக 11, 2025 18:52

தூத்துக்குடியில் எடப்பாடி செஞ்ச சம்பவத்தை டெல்லி போலீஸ் ராகுல் மற்றும் எதிர்க்கட்சி எம்பிகளுக்கு செய்ய வேண்டும். இந்திய தேசத்தை வெளிநாட்டினருடன் சேர்ந்துகொண்டு ராகுல் அவமானப்படுத்துகிறார். சுப்ரிம் கோர்ட் உடனடியாக கேஸை எடுத்து, ராகுலுக்கு தூக்கு தண்டனை கொடுப்பது இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றும்.


Iyer
ஆக 11, 2025 18:33

குறைந்தபட்சம் - இனி 100 ஆண்டுகளாவது பிஜேபி நாட்டை ஆளப்போவது உறுதி


R SRINIVASAN
ஆக 11, 2025 18:19

ராகுல் என்ற அரசியல் அனுபவம் இல்லாத ஒரு இத்தாலியனுக்கு ,உன்னுடைய பாட்டி இந்திராவின் அட்டூழியங்களை பட்டியல் போடலாமா, உன் கொள்ளு தாத்தா நேருவின் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதியை சீனாவுக்கு விட்டுக்கொடுத்த துரோகத்தை சொல்லலாமா, உங்களை ஆட்சியில் அமர்த்திய பெருந்தலைவர் காமராஜரை தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவிக்க துப்பில்லாத அரை வேக்காட்டு அரசியல்வாதியை தமிழ் நாடு பார்த்ததில்லை.


பேசும் தமிழன்
ஆக 11, 2025 18:18

பப்பு ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதியில்.... மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வில்லையா.... இப்படி வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு செய்து தான் வெற்றி பெற்றீர்களா ??அந்த சந்தேகம் மக்களுக்கு இருந்தது.... மக்கள் உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்களே.... பாம்பின் கால் பாம்பறியும்.... உங்கள் குடும்பத்துக்கு தெரியாத தில்லுமுல்லா ???


பேசும் தமிழன்
ஆக 11, 2025 18:14

அப்படியே 15 நாட்கள் ரிமாண்ட் செய்து விடுங்கள்.... அனைவரும் சொகுசு வாழ்கை வாழ்ந்து பழக்கமாகி இருப்பார்கள்.... சாமானியன் படும் கஷ்டங்கள் அவர்களுக்கு உறைக்க வேண்டும்.


Sivakumar
ஆக 11, 2025 21:07

ஒ தைவான் காளான் சாப்பிடுபவர்களை சொல்ரீங்களா, அது சரிதான்


புதிய வீடியோ