உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சிகள் அமளி; 3வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகள் அமளி; 3வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இன்று (நவ.,28) 3வது நாளாக பார்லிமென்ட் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. பார்லிமென்டிற்கு வந்த பிரதமர் மோடி, செய்தியாளர்கள் சந்திப்பில், 'மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், பார்லிமென்டை முடக்க முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சியினர் இனியாவது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும்' என வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதனை துளி அளவு கூட எதிர்க்கட்சிகள் மதிக்கவில்லை. இந்நிலையில், இன்று (நவ.,28) 3வது பார்லிமென்ட் இரு அவைகளும் கூடின. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், 'அதானி... அதானி' என, முழக்கமிட்டனர். அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த அவைத்தலைவர் அனுமதி மறுத்ததால் அமளியில் ஈடுபட்டனர். ராஜ்யசபா, காலை கூடியதுமே பிரச்னை கிளம்பியது. அதானி லஞ்ச விவகாரம், மணிப்பூர், உ.பி., மதக்கலவரம், வயநாடு இயற்கை பேரிடர் என, பல்வேறு விவகாரங்கள் குறித்து எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பார்லிமென்ட் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து 3 நாளாக எந்த மசோதாவும் தாக்கல் செய்ய அலுவல் நேரம் முடங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

visu
நவ 29, 2024 06:37

கேன்டீனில் சலுகை விலையில் 24 மணிநேர உணவு அளியுங்கள் எல்லோரும் அங்கே போய் விடுவார்கள்


raman
நவ 28, 2024 20:24

கட்சி தலைவர் தவிர அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கூட்ட தொடர் முடியும் வரை அவையிலிருந்து நீக்குங்கள் . மசோதாக்கள் மீது அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கருத்து சொல்ல விடுங்கள் பின் அமைச்சர்களை மசோதா பற்றி விளக்க சொல்லுங்கள் கடைசி நாள் எதிர்க்கட்சி தலைவர்கள் உறுதி அளித்தால் நீக்கப்பட்டவர்களை அவைக்குள் அனுமதி அளித்து மசோதாவாரியாக வோட்டுஎடுப்பு நடத்துங்கள் அன்றும் அமளியில் ஈடுபட்டால் ஒருமணிநேரம் ஒத்திவைத்து எதிர்கட்சியினரை அவைநீக்கம் செய்து ஓட்டெடுப்பு நடத்துங்கள்.அவைத்தலைவர்,எதிர்கட்சியினரிடம் அவையில் அமளிசெய்தால் இப்படித்தான் நடக்கும் என்று கண்டித்து சொல்லிவிடுங்கள்.


Narasimhan
நவ 28, 2024 17:52

இந்த காங்கிரஸ் கட்சியினருக்கு துளிகூட புத்தியில்.. போலி காந்தி குடும்பம் கட்சியை நிர்மூலமாக்கி விடும். வேண்டுமென்றே பாராளுமன்றம் நடக்கவிடாமல் ரகளை செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கடைசியில காங்கிரசில் மிஞ்சப்போவது இந்த காந்திகுடும்பம் மட்டும்தான். வெள்ளைத்தோலை பார்த்து வோட்டு போடும் மக்கள் இருக்கும்வரைதான்


A. Kumar
நவ 28, 2024 17:18

எதிர் கட்சிகள் அடுத்த தேர்தலில் டெபாசிட் இழப்பது உறுதி.அப்புறம் இ.வி.எம் மேல் வழக்கம்போல குறை கூறுவர்.


ஜெபமணி, நான்குநேரி
நவ 28, 2024 17:07

இப்படியே 95 சதவிகித நாளும் கலாட்டா பண்ணுங்க, கடைசி ரெண்டு நாளில் விவாதமே இல்லாம, எல்லா மசோதாவையும் , அவனுங்க பாஸ் பண்ண போறாங்க, தொண்டதண்ணி வத்த கத்தி, கடைசில கேண்டீன்ல உருளகிழங்கு போண்டா சாப்டது தான் மிச்சம்.


xyzabc
நவ 28, 2024 14:14

Please redirect the 40 MPs of TN to the canteen. It will be somewhat peaceful


Barakat Ali
நவ 28, 2024 14:07

எதிர்க்கட்சி எம் பி க்கள் அனைவரையும் இந்த கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யுங்கள் .....


Madras Madra
நவ 28, 2024 13:54

இவர்கள் அடுத்த தேர்தலில் காணாமல் போவது உறுதி


Raj
நவ 28, 2024 13:53

மொத்தமா லீவு கொடுத்து சம்பளத்த கட் செய்யுங்கப்பா. சும்மா அமளி..... அமளி ன்னு


Rengaraj
நவ 28, 2024 13:49

இப்படி ரகளை செய்வதற்கும் கூச்சல் போடுவதற்குமா மக்கள் இவர்களை எம்பிக்களாக தேர்ந்தேடுத்தார்கள்? விவாதம் நடத்தப்படவேண்டியது அவசியம். மக்கள் அந்த விவாதத்தை பார்க்கவேண்டும், கேட்கவேண்டும். பிரச்சினையை விரிவாக பேசினால்தான் தவறு எங்கே இருக்கிறது என்று தெரியும். தவறு யார் பக்கம் இருக்கிறது என்பதை விவாதம் நடந்தால்தான் தெரிந்துகொள்ளமுடியும் . சபையின் நாயகர் என்ன சொல்கிறாரோ அதை செவிமடுக்கவேண்டும். கட்சி முக்கியமா, மக்கள் முக்கியமா என்று யோசித்துப்பார்த்து எம்பிக்கள் செயல்படவேண்டும். ஈகோவை அனைத்து எம்பிக்களும் ஆளும் கட்சி உட்பட கைவிடவேண்டும்.


முக்கிய வீடியோ