உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதிர்க்கட்சிகள் விவாதம்; காங்., சார்பில் பங்கேற்க சசிதரூர் மறுப்பு

ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதிர்க்கட்சிகள் விவாதம்; காங்., சார்பில் பங்கேற்க சசிதரூர் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்டில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் விடுத்த அழைப்பை, அக்கட்சியின் எம்.பி., சசிதரூர் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b06mi8qk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய அரசும் பார்லிமென்டில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்த சம்மதம் தெரிவித்துள்ளது. லோக் சபாவில் இன்று விவாதம் நடத்தப்பட இருக்கிறது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நடக்கும் சிறப்பு விவாதத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சி, எம்.பி., சசி தரூருக்கு அழைப்பு விடுத்தது. ஏற்கனவே, காங்கிரஸ் தலைமையுடன் சசி தரூருக்கு மோதல் போக்கு இருந்து வருகிறது. மேலும், கடந்த சில நாட்களாகவே பிரதமர் மோடியையும், பாஜ அரசையும் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் புகழ்ந்து பேசி வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு சென்று விவரித்த மத்திய அரசின் அனைத்து கட்சியினரின் குழுவிலும் சசி தரூரும் இடம்பெற்றிருந்தார்.இந்த சூழலில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் அவர் பங்கேற்பாரா? மாட்டாரா? என்று கேள்வி எழுந்து வந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி விடுத்த அழைப்பை, அக்கட்சியின் எம்.பி., சசிதரூர் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம், காங்கிரஸ் தலைமைக்கும், சசிதரூருக்கும் இடையிலான மோதல் மேலும் முற்றியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M. PALANIAPPAN, KERALA
ஆக 02, 2025 12:15

மனசாட்சி உள்ள ஒரு காங்கிரஸ்காரன்


M S RAGHUNATHAN
ஜூலை 29, 2025 09:51

திமுக சார்பாக கனிமொழி, சரத் பவார் கட்சி சார்பாக சுப்ரியா சூலே பேசுவாரா?


தத்வமசி
ஜூலை 28, 2025 21:35

காங்கிரஸ்சில் ஒரு மானஸ்தன் இருக்கிறார்.


V RAMASWAMY
ஜூலை 28, 2025 18:41

தாய்நாட்டுப்பற்றுள்ள இன்னமும் காங்கிரசில் இருக்கும் நாட்டு நலத்தில் அக்கறையுள்ள படித்த வல்லவர். இப்பொழுது மதில் மேல், எப்பொழுது உண்மை பக்கம்?


Thirumoorthy Rangasamy
ஜூலை 28, 2025 16:52

ஆமாம்.. அந்நியன் தவறுகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்பவன் தான். அதில் தவறேதும் இல்லை.


Ganapathy
ஜூலை 28, 2025 15:26

ராகுலைப் போல பல சலுகைகளை இங்கு நமது வரியில் பெற்று நன்றிகெட்ட முறையில் தாய்நாட்டை வெளிநாடுகளில் பழித்துப் பேசாத ஒரு மானமுள்ள இந்தியன் சசிதரூர்.


vivek
ஜூலை 28, 2025 15:16

தாய்நாட்டு உளவாளிகளுக்கு ...


venugopal s
ஜூலை 28, 2025 14:47

அந்நியனாக மாறிய தருணம்!


vivek
ஜூலை 28, 2025 15:17

கனிமொழி அக்காவை வேணும்னா விளையாட்லல சேர்த்துக்கோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை