உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசோதாக்களுக்கு ஹிந்தியில் பெயர் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

மசோதாக்களுக்கு ஹிந்தியில் பெயர் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

புதுடில்லி, டிச. 6-புதிய சட்டங்கள் மற்றும் மசோதாக்களுக்கு முழுமையாக ஹிந்தியில் பெயர் வைக்கப்படுவதற்கு, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தன. ஹிந்தி திணிப்பு என்ற அவர்களுடைய வாதத்தை மறுத்துள்ள பா.ஜ., காலனியாதிக்க மனநிலையிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்று கூறியுள்ளது.கடந்த 90 ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும், இந்திய விமானங்கள் சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. விமானத் துறையில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பது, தொழில் செய்வதை எளிமையாக்கும் நோக்கத்தோடு பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

திணிக்க வேண்டாம்

இதற்கான மசோதாவை, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்தார். 'பாரதிய வாயுயான் விதேயக்' என்ற பெயரிலான இந்த மசோதாவுக்கு, திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.“ஏன் அனைத்து சட்டங்களுக்கும் ஹிந்தியிலேயே பெயர் வைக்கப்படுகின்றன. லோக்சபா தேர்தல் முடிவுகள், பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளன. ஆனால், மத்திய அரசு ஹிந்திமயமாக்கி வருகிறது. இது ஹிந்தி திணிப்பு,” என, திரிணமுல் காங்.,கின் சாகரிகா கோஷ் கூறினார்.“ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தியை திணிக்காதீர்கள். எந்த ஒரு மசோதாவுக்கும் ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தில் பெயர் வைக்க வேண்டாம். உடனடியாக இந்த மசோதாவின் பெயரை ஆங்கிலத்துக்கு மாற்றவும்,” என, தி.மு.க.,வின் கனிமொழி சோமு கூறினார்.

அரசியலமைப்பு

ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியின் நிரஞ்சன் ரெட்டி கூறுகையில், “இந்த மசோதாவுக்கான பெயரை மாற்ற வேண்டும். ஹிந்தி திணிப்பு என்பதற்காக கூறவில்லை. சட்டம் முழுதும் ஆங்கிலத்தில் உள்ளது. சட்டத்தின் பெயர் மட்டும் ஹிந்தியில் உள்ளது. இது, அரசியலமைப்பு தேவையை நிறைவேற்றுவதாக இல்லை. சட்டத்தை ஹிந்தியில் மொழிபெயர்க்கும்போது, தலைப்பில் இருந்து அனைத்தும் ஹிந்தியில் இருக்கலாம்,” என, குறிப்பிட்டார்.இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.,வின் கியான்ஷியாம் திவாரி, “இது ஹிந்தி திணிப்பு அல்ல. மசோதாவை தாக்கல் செய்தவர், தெலுங்கு பேசும் மாநிலத்தைச் சேர்ந்தவர். “அரசியலமைப்பு நடைமுறைகளின்படியே, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இன்னும் காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து விடுபடவில்லை,” என கூறினார்.இதையடுத்து, இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Sampath Kumar
டிச 08, 2024 08:45

சமஸ்கிரதமே இந்திய ஆட்சி மொழியாக வேண்டும் என்று அம்பேத்கார் சொன்னாரா? எங்கே சொன்னாரு ன்று உன்னால் நிருபிக்க முடியுமா


theruvasagan
டிச 06, 2024 21:55

ஒவ்வொரு புயலக்கும் ஒவ்வொரு நாட்டின் மொழியில் பெயர் வைப்பதை போல சட்டங்களுக்கும் பல்வேறு இந்திய மொழிகளில் பெயர் வைக்கலாமே. இந்தி பேசாத மாநிலங்களும் நிறைய உள்ளனவே. இப்படி இந்தியில் மட்டும் பெயர் வைத்தால் அது ஒருவகையான திணிப்பு என்றுதான் கொள்ள வேண்டும்.


hari
டிச 06, 2024 11:47

திராவிட புள்ளிகள் நடத்தும் பள்ளிகளிலும் ஹிந்தி தடை செய்யலாமா?


MUTHU
டிச 06, 2024 11:18

FENGAL புயல் என்ன மொழி ஐயா. இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளுகின்றோம். மத்திய அரசு தனது நலத்திட்டங்களை ஒவ்வொரு மாநிலமும் சொல்லும் வாசகங்களால் அறிமுகப்படுத்துமாறு மாநில அரசுகள் கேட்க வேண்டியதுதானே. நமது மொழியை மற்ற மாநிலங்களும் தெரிந்து கொள்ளுமே.


Barakat Ali
டிச 06, 2024 12:22

அது அரபி மொழிப்பெயர் .... சவூதி வைத்த பெயர் அது .....


AMLA ASOKAN
டிச 06, 2024 10:53

இந்தி தெரியாத மக்களுக்கு எந்த சட்டமும் புரியாது மட்டுமின்றி , போயும் சேராது. மத்திய அரசுக்கும் நிதி மிச்சம். உலகின் எந்த நாட்டிலும் மக்களுக்கு புரியும் வகையில் தான் பெயர் வைக்கப்படும் .


Sampath Kumar
டிச 06, 2024 10:52

இந்த நாட்டுக்கு பெயரே ஹிந்தியா தானே அதன் திரிபு தான் இந்திய அப்படி இருக்கும் பொது மசோதாக்கள் எல்லாம் அப்படித்தானே இருக்கும் மற்ற மொழிகள் எல்லாம் அளிக்கப்பட வேண்டியவைகள் என்று மத்திய அரசு நினைக்கிறது போல என்ன செய்ய


Barakat Ali
டிச 06, 2024 10:07

எதையாவது முன்னிட்டு அவையை முடக்குதலே நோக்கம்... தேசவிரோத, அழிவு சக்திகள்.. இவர்களைத் தேர்ந்தெடுத்தது தவறு என்று இதுகாறும் வாக்காளர்கள் உணர்ந்திருப்பார்கள் .....


ஆரூர் ரங்
டிச 06, 2024 09:25

சமஸ்கிருதம் (கணினி மொழிகள் போல) யாருடைய தாய் மொழியுமல்ல. இந்த சட்டங்களின் பெயர் தூய சமஸ்கிருதத்தில்தான் உள்ளன. அண்ணல் அம்பேத்காரே சமஸ்கிருதமே நாட்டின் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.


GMM
டிச 06, 2024 08:25

ஆங்கிலத்தில் சட்ட விதிகள் இருக்கும் போது சட்டம் பெயர் இந்தியில் வைப்பதை தவிர்க்க வேண்டும். அது போல் அனைத்து மாநில நிர்வாகம். பிஜேபி ஆட்சியில் வட இந்திய - தென் இந்திய மக்கள் நட்பு அதிகரிப்பு. இந்தி நாடுமுழுவதும் பேச்சு வழக்கில் வரும் வரை புதிய முறையை நிறுத்தவும். காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் எதிர்க்காது மம்தா, திராவிடம் அரசியல் ஆக்கும். பகைமை உருவாக்கும்.


ஆரூர் ரங்
டிச 06, 2024 07:53

இந்திரா காந்தி ஆவாஸ் யோஜனா திட்டம் எந்த மொழிப் பெயர்? யார் அந்தப் பெயரில் திட்டம் கொண்டு வந்தது? ரோஜ்கார் சமாச்சார், யோஜனா அரசு செய்தி இதழ்களையும் சமாச்சார் என்ற பெயரில் செய்தி நிறுவனத்தையும் துவக்கியது இந்திராகாந்தி.


முக்கிய வீடியோ