உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி புறப்பட்ட எம்பிகள் கைது

டில்லியில் தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி புறப்பட்ட எம்பிகள் கைது

புதுடில்லி: தேர்தல் முறைகேடு , வாக்காளர் பட்டியலில் போலியாக பலர் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்த காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணியினர் இன்று (ஆக.11)லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில் பல எம்.பி.,க்கள், பார்லிமென்டில் இருந்து தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். பேரணியாக சென்ற எம்.பிக்கள் கைது செய்யப்பட்டனர்.

பதவி விலகினார்

https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nrp0emr6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய பா.ஜ., அரசுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவியதால் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பணியை முடுக்கிவிட்ட தேர்தல் கமிஷன், தேர்தல் நடத்தும் அதிகாரியாக ராஜ்யசபா பொதுச்செயலர் பி.சி.மோடியை நியமித்து உத்தரவிட்டது. துணை ஜனாதிபதி தேர்தல் செப்., 9ல் நடக்கும் என்றும், ஓட்டுப்பதிவு முடிந்ததும் அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு பின், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி துவங்கிய நிலையில், வரும் 21 வரை மனு தாக்கல் செய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் மட்டுமே தேர்தல் நடக்கும். ஒருவர் மட்டுமே போட்டியிட்டால், அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

நெருக்கடி

துணை ஜனாதிபதி தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் நிலையில், அக்கூட்டணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க, காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது. அதனால், துணை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தவும் இண்டி கூட்டணி திட்டமிட்டுள்ளது.காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டில்லி சாணக்யபுரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இன்றிரவு விருந்து அளிக்கிறார். அப்போது, பொது வேட்பாளர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:

துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. எனினும், அக்கூட்டணிக்கு வெற்றியை எளிதாக கொடுக்கக்கூடாது என்பதில் இண்டி கூட்டணி உறுதியாக உள்ளது. எனவே, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க, பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

ஒரு மித்த கருத்து

தே.ஜ., கூட்டணியின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட உடன், நாங்களும் எங்களது வேட்பாளரை அறிவிப்போம். இது தொடர்பாக, கூட்டணி கட்சி தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே பேசி வருகிறார்; அவர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் விவகாரத்தில், இண்டி கூட்டணியில் ஒற்றுமை நிலவுகிறது. அதேபோல, துணை ஜனாதிபதி தேர்தலிலும் ஒற்றுமை இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. யாருக்கு வெற்றி? லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களின் மொத்த எண்ணிக்கை 788. ஏழு இடங்கள் காலியாக இருப்பதால், தற்போது 781 எம்.பி.,க்கள் உள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற, 391 எம்.பி.,க்களின் ஓட்டுகள் தேவை. மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு, லோக்சபா, ராஜ்யசபாவில் மொத்தம் 422 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதால், அக்கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணிக்கு, இரு சபைகளிலும் 313 எம்.பி.,க்களே உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ