உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு: ராகுல்

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டனர். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. காஷ்மீரில் அமைதி நிலவ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், இன்று நடந்த முக்கியமான இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்று இருக்க வேண்டும். மூன்று அடுக்கு பாதுகாப்பு இருந்தும் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது எப்படி? பாதுகாப்பு குறைபாடு உள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டின் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்போம். இந்த தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்கு உரியது. நாடு ஒற்றுமையாக உள்ளது என்ற செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்றார்.ராகுல் கூறியதாவது: பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்தோம். அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் காஷ்மீர் பயணம்

இதனிடையே, பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற ராகுல் நாளை காஷ்மீர் செல்ல உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பேசும் தமிழன்
ஏப் 25, 2025 14:23

கான் கிராஸ் கட்சி ஒழிந்தாலே.... நமது நாட்டில்... பாதி தீவிரவாதம் ஒழிந்து விடும்.... இவர்கள் தான் அவர்களின் பாதுகாவலர்கள்.


Anantharaman
ஏப் 25, 2025 08:24

இந்த ராகுல் முதலில் ஒழித்தால்தான நாடு உருப்படும்


ராமகிருஷ்ணன்
ஏப் 25, 2025 07:45

இந்த மாதிரியான நேரங்களில் முஸ்லிம் ஆதரவை குறைத்து கொள்வது நல்லது என்று ஆலோசனை சொல்லப்பட்ட ள்ளது இந்த விஷயத்தில் பி ஜே பி அரசை எதிர்த்தால் மிக மிக மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் உணர்ந்து உள்ளார்கள்


Kasimani Baskaran
ஏப் 25, 2025 03:53

துரோகிகளை தூரவைக்க வேண்டியது அவசியமாகிறது...


M Ramachandran
ஏப் 25, 2025 03:16

ஒரு பாட்டம் அழுது தீர்த்து விட்டோம். வேறு வழி தெரிய வில்லை. இது காலத்தின் கட்டாயம்.


rishi
ஏப் 25, 2025 00:43

பாகிஸ்தானை பந்தாடுவது அப்புறம் உள்நாட்டிலேயே , பிரிவினைவாதம் பேசும் கருங்காலிகளை முதலில் கலையெடுக்கவேண்டும். திருமாவளவன் போன்ற ஸ்லீப்பர் செல்கலை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அந்நிய கைக்கூலியைப்போல் செயற்படுகின்ற போலி மதசார்பின்மை பேசும் , அரேபிய அடிமைகளை முதலில் அடக்கவேண்டும்..


கல்யாணராமன்
ஏப் 24, 2025 23:45

அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். தேவையில்லாத பேச்சுக்கெல்லாம் இடமில்லை.


Anand
ஏப் 24, 2025 22:34

நம் நாடுதான் முதல், அரசியல் எல்லாம் அப்புறம். ஆயிரம் வேறுபாடு உண்டு எனினும் அனைவரும் சேர்ந்து எதிர்ப்போம்


thehindu
ஏப் 24, 2025 21:59

இந்து மதவாத அரசிடமிருந்து தங்கள் மானம் மரியாதையை காத்துக்கொள்ள நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் எதைவேண்டுமானாலும் தியாகம் செய்ய தாயாராகிவிட்டார்கள்


பேசும் தமிழன்
ஏப் 25, 2025 14:27

மதத்தின் பெயரால் நாட்டை பிரித்த போதே உங்களை விரட்டி அடுத்து இருக்க வேண்டும்.. நேரு கான்கிராஸ் செய்த தவறு... உங்களை இங்கே இருக்க வைத்து.. அனை‌த்து விதமான சலுகைகளையும் கொடுத்து கெடுத்து வைத்து இருக்கிறார்கள்... முதலில் உங்களை போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் ஆட்களை களையெடுக்க வேண்டும்.


ganapathy
ஏப் 24, 2025 21:50

இவரை நம்ப முடியாது. இப்பத்தான் அமெரிக்காவுல வழக்கம்போல நம்மைப் பற்றி கேவலமாக பேசினார். இவர் முதல்ல இந்தியனா இல்லையா என்பதே தெளிவாகவில்லை. எனவே இவரின் கருத்து தானும் இருக்கேனுனு காட்டிக்க செய்கையும் வெறும் உளறலே.


Bhakt
ஏப் 24, 2025 22:54

இவரின் மரபணு இந்தியருடையதாக இருக்க வாய்ப்பில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை