உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உணவு பொருட்களில் புழு விசாரணைக்கு உத்தரவு

உணவு பொருட்களில் புழு விசாரணைக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்களில் புழு இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கேரளாவின் வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் நுாற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதில் மிகவும் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள், அருகில் உள்ள உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியால் நிர்வகிக்கப்படும் மேப்பாடி கிராம ஊராட்சியால் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து, உணவில் புழு இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ram pollachi
நவ 09, 2024 17:56

புழுத்த அரசியல் - எங்கே எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதை இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.


ஆரூர் ரங்
நவ 09, 2024 08:58

புழுக்களை உண்பது ஹலால் தானா என்பதை பற்றி கமிட்டி அமைத்து விசாரிக்கலாம்.


Kasimani Baskaran
நவ 09, 2024 07:16

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் உணவு போடக்கூடாதா... பாராட்டுவதை விட்டுவிட்டு புகார் கொடுப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை