மேலும் செய்திகள்
நிரந்தர நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு
06-May-2025
புதுடில்லி: 'உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகளுக்குள் எவ்வித பாகுபாடும் இல்லாமல், ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலர், சென்னை உயர் நீதிமன்றம் உட்பட பல உயர் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்ததாவது:ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.வழக்கறிஞர்களாக இருந்து நீதிபதிகளாக நியமிக்கப்படுபவருக்கும், கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக இருந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களுக்கும் ஓய்வூதியங்களில் பல்வேறு மாறுபாடுகள் உள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:உயர் நீதிமன்ற நீதிபதிகளில் எவ்வித பாகுபாடும் பார்க்கக் கூடாது. கூடுதல் நீதிபதிகளாக இருந்தாலும், நீதிபதிகளாக இருந்தாலும் ஒரே மாதிரியான ஓய்வூதியமே வழங்க வேண்டும்.அதுபோல, வழக்கறிஞராக இருந்து நீதிபதியானாலும், மாவட்ட நீதித் துறையில் இருந்து நீதிபதியானாலும், ஒரே மாதிரியான ஓய்வூதியமே வழங்கப்பட வேண்டும்.எந்த வயதில் கூடுதல் நீதிபதியாக இருந்தாலும், அதுபோல, எந்த வயதில் நீதிபதியாக நியமிக்கப்பட்டாலும், அவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியமே வழங்கப்பட வேண்டும்.இதன்படி, ஓய்வுபெறும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு, ஆண்டுக்கு, 15 லட்சம் ரூபாயும், நீதிபதிகளுக்கு, ஆண்டுக்கு, 13.50 லட்சம் ரூபாயும் ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
06-May-2025