உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்ஜாமின் கோரும் மனுக்களை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

முன்ஜாமின் கோரும் மனுக்களை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

'முன்ஜாமின் கோரும் மனுக்களை அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள் முடித்து வைக்க வேண்டும்' என, அனைத்து உயர் நீதிமன்றங்கள், விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த 2019ல், குற்ற வழக்கில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். பல ஆண்டுகள் கடந்து சில வாரங்களுக்கு முன் அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்க மறுத்தது. இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட நபர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி பர்த்திவாலா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், 'முன்ஜாமின் கேட்ட வழக்கு கூட நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்திருக்கிறது. ஒருவர் மனு தாக்கல் செய்து அது விசாரிக்கப்பட்டு உத்தரவு வருவதற்குள் அந்த நபர் கைது செய்யப்பட்டால், அவர் வழக்கமான ஜாமின் கேட்க வேண்டி இருக்கும். 'அதற்குள் அந்த முன்ஜாமின் மனுவை நீதிமன்றம் முடித்து வைத்திருக்க வேண்டும். எனவே, முன் ஜாமின் கேட்கக்கூடிய மனுக்கள் மீது குறைந்தபட்சம் மூன்று மாதம் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குள் விசாரணை நீதிமன்றம் அல்லது சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள் முடிவெடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தினர். -- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
செப் 13, 2025 09:27

முன் ஜாமீன் என்பதே கைதைத் தவிர்க்கும் சந்தர்ப்பத்தில் கொடுக்கப்படும் மனு .... அதன் மீது முடிவெடுக்க ஆறு மாதங்களா ?????


அஜய் இந்தியன்
செப் 13, 2025 02:52

1886 ஆண்டு காங்கிரஸ் கட்சி தொடங்க பட்டத்தில் இருந்து 140ஆண்டு ஆகியும். இன்னும் நம் நாடு பல பிரச்சனை களை சந்தித்து வருகிறது. அதில் பல அரசியல்வாதிகள் வாழ்ந்தார்கள் காலம் ஆனார்கள். ஆனால் வலது சாரிகள், இடது சாரிகள் என்று மன நிலையால் சிலர் இந்தியா வை மிக நேசிக்கிறார்கள், சிலர் அவர்கள் மதம், மொழி, இனம், ஜாதியை பின்னால் மட்டும் வாழ்கிறார்கள். இங்கு நேர்மையான அரசியல்வாதிகள் இருப்பதால் தான் இப்போதும் இந்திய சரியான நிலையில் உள்ளது. இதற்கு பாஜக அரசுக்கும், RSS அமைப்பிற்கும் பற்றி தெரிவிக்க வேண்டும். காரணம் மோடி போன்ற நல்லவர்களை கொடுத்தது RSS, பாஜக வின் கொள்கைதான். சரி இதற்கும் சட்டத்தில் இருக்கும் பிரச்சனைக்கும் என்ன விஷயம் என்றால். பாஜக ஆட்சி வில் இருந்தாலும் பழைய சட்டம் நடவடிக்கை களை எளிதில் மாறி விட முடியாது. இங்கு சட்டம் சரி இல்லை என்று சொல்ல வில்லை. ஒரு சில சட்டத்தால் குற்றவாளிகள் ஜாமின், பணத்தை வைத்து குற்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிது விடுகிறார்கள். இதை தான் ஆளும் கட்சி சரி செய்ய வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்க முடியும்.


சமீபத்திய செய்தி