உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூளை செயலிழந்த இருவரின் உடல் உறுப்புகள் தானம்

மூளை செயலிழந்த இருவரின் உடல் உறுப்புகள் தானம்

பெங்களூரு: சாலை விபத்துகளில் காயமடைந்து, மூளைச்சாவு அடைந்த இரண்டு இளைஞர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுநாத், 32, சிக்கபல்லாபூர், சிட்லகட்டாவில் வசித்த அஜய், 25, ஆகிய இருவரும் சமீபத்தில் சாலை விபத்துகளில் சிக்கி காயமடைந்தனர். பெங்களூரின் ஸ்பர்ஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி இவர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.எனவே இவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து, குடும்பத்தினரிடம் டாக்டர்கள் விவரித்தனர். இருவரின் குடும்பத்தினரும், உறுப்பு தானம் அளிக்க சம்மதித்தனர். அதன்பின் இருவரின் உடல் உறுப்புகளை, தானமான பெற்று தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டன.மஞ்சுநாத் மற்றும் அஜயின் சிறுநீரகங்கள், கல்லீரல்கள் ஸ்பர்ஷ் மருத்துவமனையின் நோயாளிகளுக்கு நேற்று முன் தினம் பொருத்தப்பட்டன. இவர்களின் மற்ற உறுப்புகள், பெங்களூரின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு, வெற்றிகரமாக வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி