உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் சிந்துாரில் நம் ராணுவம் அடிச்சது 9 இல்ல 16; சொல்வது நாம் அல்ல பாகிஸ்தான்

ஆப்பரேஷன் சிந்துாரில் நம் ராணுவம் அடிச்சது 9 இல்ல 16; சொல்வது நாம் அல்ல பாகிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி,: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, நம் ராணுவத் தரப்பில் கூறப்பட்டதைவிட அதிக இடங்களை பாகிஸ்தான் இழந்துள்ளதாக அந்நாட்டு ஆவணங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் தரைமட்டமாக்கியது. பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் - -இ- - முகமது தலைமையகம் மற்றும் முரித்கேவில் உள்ள லஷ்கர்- - இ- - தொய்பா பயிற்சி மையம் உட்பட ஒன்பது இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஆப்பரேஷன் சிந்துார் குறித்து நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர். தாக்குதல் மற்றும் சேதம் தொடர்பான செயற்கைக்கோள் படங்களும் வெளியிடப்பட்டன.இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் பன்யான் உன் மர்சூஸ்' என்ற பெயரில் பாக்., ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதில், நம் ராணுவத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதல் பகுதிகள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பயங்கரவாதிகள் இருந்த பஹவல்பூர், முரித்கே உள்ளிட்ட ஒன்பது இடங்களைத் தாண்டி மேலும் ஏழு இடங்களில் நம் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.அங்குள்ள பெஷாவர், ஜாங், சிந்துவில் உள்ள ஹைதராபாத், பஞ்சாபில் உள்ள குஜராத், பவால்நகர், அட்டாக் மற்றும் சோர் ஆகிய பகுதிகளில் கூடுதலாக தாக்குதல் நடத்தப்பட்டதாக படங்களுடன் அந்த ஆவணத்தில் விளக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மிக கடுமையான தாக்குதலை நம் ராணுவம் நடத்தியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆப்பரேஷன் சிந்துாரை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்புகளில், பெஷாவர், அட்டாக் உள்ளிட்ட ஏழு இடங்களில் தாக்குதல் நடத்தியது குறித்து விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.தற்போது பாகிஸ்தான் வெளியிட்ட ஆதாரங்கள் வாயிலாக குறிப்பிட்டதை விட, அதிக இடங்களை நம் ராணுவம் தாக்கியதால் தான், போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rajendra kumar
ஜூன் 07, 2025 05:52

மோடிஜி/பாஜக யின் தலைமை கிட்டியது பாரத மக்களின் அதிர்ஷ்டம். கடந்த பத்து வருடங்களுக்கு மேல் ராணுவத்தை நவீனப் படுத்தி பல மடங்கு பலம் சேர்த்திருக்கிறார். நாட்டுப் பற்று மிக்க நம் ராணுவத்திற்கு பலம் சேர்த்ததின் மூலம் எதிரிகளை அடக்கி உலக அரங்கில் நம் நாட்டின் வலிமையை தெரியப் படுத்தி விட்டார்


DHANASEKARAN DEVAN
ஜூன் 05, 2025 03:46

அவன்கிட்ட ஒரு இலட்சம் கடன் வாங்கவில்லை..... இரண்டு இலட்சம் வாங்கினேன் யுவர் ஹானர் என்பது போல் உள்ளது


lana
ஜூன் 04, 2025 12:07

எல்லாவற்றையும் ராணுவம் தெரிவிக்க தேவையில்லை. தேசத்தின் பாதுகாப்பு கருதி முக்கியமான தகவல்கள் ஐ தெரிவிக்க தேவையில்லை


கண்ணன்
ஜூன் 04, 2025 11:00

இதனை திரு. ரவுல் வின்சிக்குத் தெரியப்படுத்தவும்


Anand
ஜூன் 04, 2025 10:34

அடி வாங்கியவனுக்கு தான் தெரியும் எங்கெங்கு வீங்கியிருக்கு என்று.....


Kalyanaraman
ஜூன் 04, 2025 07:52

தாக்கிய இடங்களை இந்தியா மறைத்ததற்கு காரணம் என்னவோ? அதிக இடங்களை சொல்லி இருந்தால் மேலும் நம் நாட்டின் வலிமைக்கும் திறமைக்கும் வைக்கும் மகுடம் தானே.


RAVINDRAN.G
ஜூன் 04, 2025 12:00

ஊமை குத்து வெளியே தெரியக்கூடாது. உள்ள வலி இருந்துகிட்டேயே இருக்கணும். இனிமேல் வாலாட்டக்கூடாது என்று நினைத்துக்கொண்டே இருக்கணும்.


RAVINDRAN.G
ஜூன் 04, 2025 12:00

ஊமை குத்து வெளியே தெரியக்கூடாது. உள்ள வலி இருந்துகிட்டேயே இருக்கணும். இனிமேல் வாலாட்டக்கூடாது என்று நினைத்துக்கொண்டே இருக்கணும்.


Varadarajan Nagarajan
ஜூன் 04, 2025 07:16

ராணுவ நிலைகள் மட்டுமல்ல ஆயுத தளவாளங்கள், சேமிப்பு கிடங்குகள் தகவல்களை பாகிஸ்தான் ரகசியமாக வைத்திருந்தது. சர்வதேச விதிகளின்படி அணு நிலையங்கள் பற்றிய தகவலை சர்வதேச அமைப்பிடம் தெரிவிக்கவேண்டும். ஆனால் பாகிஸ்தான் சில தகவல்களை மறைத்தது. நமது ராணுவம் அந்த நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதனால் அணுக்கசிவு ஏற்பட்டது. உடனடியாக சர்வதேச அமைப்பு பாகிஸ்தான் சென்று பாதுகாப்பை ஆய்வுசெய்தது. அணு ஆயுதங்களால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என மிரட்டிக்கொண்டிருந்தநிலையில் துல்லிய தாக்குதலால் பாகிஸ்தானுக்கே ஆபத்து நேர்ந்ததால் வேறு வழியின்றி உடனடியாக கதற ஆரம்பித்தது. அத்துடன் இந்தமுறை ராணுவ நடவடிக்கையின்போது வேறு நாடுகளை நம்பியிராமல் நமது ராணுவத்திற்கு தேவையான அனைத்து செயற்கைகோள் தகவல்களையம் இஸ்ரோ வழங்கியது. எனவே அனைத்து ரகசியம் காக்கப்பட்டது. எனவேதான் இந்த போரை அமெரிக்க உள்பட உலக நாடுகள் அனைத்தும் வியந்து பார்க்கின்றன


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 04, 2025 06:59

கதறுங்க.. கதறுங்க... மோடி அடி எப்படி இருக்கு.. குங்கும பொட்டு வச்சுக்கிட்டு காவி உடை போட்டால், மோடி சாமியார் என்று நினைத்தாயா.. இந்திய பெண்களில் குங்குமத்தை அழித்த பாவிகளுக்கு.. கடவுள் மோடி வழியாக கொடுக்கும் தண்டனைதான் இது ...


Indhuindian
ஜூன் 04, 2025 06:00

இதற்க்கு உண்டான "சபூத்" உடனடியாக வெளியிட வேண்டும் இப்படிக்கு இந்திய தேசத்தில் உள்ள இந்திய துரோகிகள். அப்போதுதான் மோடி அரசு சரியான தகவலை கொடுக்க வில்லை தாக்குதலே நடக்கவில்லை என்று கூப்பாடு போடமுடியும்


T meenakshi sundaram
ஜூன் 04, 2025 05:08

மிகச் சிறப்பான செயல்பாடு ஜெய்ஹிந்த்