உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் உண்மையான எதிரி இதுதான்: விளக்கிய பிரதமர் மோடி!

இந்தியாவின் உண்மையான எதிரி இதுதான்: விளக்கிய பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: ''இந்தியாவின் உண்மையான எதிரி பிற நாடுகளை சார்ந்திருப்பது தான். இந்தியாவின் இந்த எதிரியைத் தோற்கடிக்க நாம் ஒன்றுபட வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.குஜராத்தின் பாவ் நகரில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: இன்று, நவராத்திரி பண்டிகை தொடங்கவிருக்கும் வேளையில் நான் பாவ்நகருக்கு வந்துள்ளேன். இந்த ஆண்டு, ஜிஎஸ்டி குறைப்பு காரணமாக சந்தைகள் அதிக வளர்ச்சியை சந்திக்கும். எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இந்தியர்களுக்கும், வெளிநாடுகளில் இருந்த வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ao00g2dh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தன்னம்பிக்கை

இந்தியாவின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே ஒரு மருந்துதான் உள்ளது, அதுதான் தன்னம்பிக்கை. வளர்ச்சிக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. காங்கிரஸ் நமது நாட்டின் இளைஞர்களுக்கு பெரும் தீங்கு விளைவித்தது. உலகம் முழுவதும் பொருட்களை அனுப்புவதற்காக இந்தியா வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6 லட்சம் கோடி செலுத்துகிறது. இந்த தொகை நமது பாதுகாப்புத்துறை பட்ஜெட்டுக்கு சமம் ஆகும்.

முதுகெலும்பு

பெரிய கப்பல்களை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் கடல்சார் துறையை வலுப்படுத்தவும் அரசு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. உலகளாவிய கடல்சார் சக்தியாக இந்தியாவின் எழுச்சிக்கு இந்தியாவின் துறைமுகங்கள் முதுகெலும்பாக உள்ளன. ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது; பெரிய கப்பல்கள் உருவாக்கப்படும் என்று நான் தேசத்திற்கு உறுதியளிக்கிறேன்.

மிகப்பெரிய எதிரி

இந்தியாவில் திறனுக்கு ஒருபோதும் பற்றாக்குறை இருந்ததில்லை. ஆனால் காங்கிரசுக்கு ஆட்சி காலத்தில் அதனை பயன்படுத்த திறனில்லை. இன்று, இந்தியா உலகளாவிய சகோதரத்துவ உணர்வோடு முன்னேறி வருகிறது. உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமக்கு எந்த எதிரியும் இருந்தால், அது மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுதான் நமது மிகப்பெரிய எதிரி. இந்தியாவின் இந்த எதிரியைத் தோற்கடிக்க நாம் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
செப் 21, 2025 07:24

14 வருஷமா அமெரிக்கா அமெரிக்கா அப்கே பார் ட்ரம்ப் சர்க்கார்னு சொன்னவரு...


Anand
செப் 20, 2025 15:51

உண்மை..


m.arunachalam
செப் 20, 2025 15:45

நம் பலஹீனங்களை களைய தீவிர முயற்சி எடுத்தால் முடியும் .


m.arunachalam
செப் 20, 2025 15:16

மனித வளம் நிறைந்த நம்மால் முடியும். ஆல் பாஸ் மற்றும் சலுகைகள் , இலவசங்கள் மூலம் நாம் மிகவும் பகீனமாக உள்ளொம். ஜாதி கட்சி மற்றும் இளைஞர்களை தவறாக வலி நடத்துபவர்களை நேரடியாக அழைத்து புரியவைத்து எச்சரிக்கை வேண்டும் . அணைத்து மாநில முதல்வர்களும் இதை செய்ய வேண்டும் . ஓட்டுக்காக மற்றும் பயன்படுத்திக்கொள்ளும் நிலையிலிருந்து மாற வேண்டும்.


Nathan
செப் 20, 2025 14:15

மிகவும் சரியான சிறப்பான சிந்தனை கொண்ட தலைவர்.


பெரிய குத்தூசி
செப் 20, 2025 14:08

டாடா, அதாணி , ஜியோ, HAL , ZOHO இந்திய நிறுவனங்கள் மொபைல் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றை ஆப்பிள், சாம்சங் போன்ற உலக தரத்திற்கு தயாரிக்க முன்வரவேண்டும். ஆட்டோமொபைல் விஷயத்தில் மட்டும் நாம் மிதமிஞ்சி முன்னேறி உள்ளோம். இன்னும் ஒரு வருடங்களில் செமிகண்டக்டர் விஷயத்தில் நாம் நம் தேவைகளுக்கு முழுமை அடைந்துவிடுவோம், செமிகண்டக்டர் ஏற்றுமதியில் இரு வருடங்களில் இந்திய கோலோச்ச நிறைய வாய்ப்புள்ளது. உற்பத்தி துறைக்கு தேவைப்படும் முக்கிய கனிமங்கள் நிறைய வெளிநாடுகளில் இருந்து வாங்குகிறோம். இந்தியா முழுவதும் நிறைய ஆய்வுகள் செய்தால் நமக்கு தேவையான கனிமங்கள் நமது பூமியிலே கிடைக்க வாய்ப்பு உள்ளது. அந்தமானில் எடுக்க இருக்கும் எரிபொருள் இன்னும் 2 வருடங்களுக்குள் இந்திய தேவையை பூர்த்தி செய்யும், அதற்குள் 2030 ல் 80 சதவிகித மின்சார கார்கள் வெற்றிடத்தை நிரப்பும். சமூக வலைத்தளங்கள் இந்தியாவுக்கு என தனியாக தேவை. தேசிய பாதுகாப்பு கருத 143 கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டிற்கு வாட்ஸாப்ப், facebook , இன்ஸ்டாகிராம் , டிக்ட்டாக் , X TWITTER போன்ற தனி சமூக வலைத்தளங்கள் உருவாக்கவேண்டும். மேலே உள்ளவற்றை செய்து முடித்தல் நாம் முக்கிய விஷயங்களில் தன்னிறைவு அடைந்து இந்தியா பாதுகாப்பாக இருக்கும்


அசோகன்
செப் 20, 2025 13:56

உண்மையை உரக்க சொன்னார் மோடிஜி


Ramesh Sargam
செப் 20, 2025 13:52

இனியும் இந்தியர்கள் வெளிநாட்டு மோகத்தை தவிர்த்து, குறிப்பாக அமெரிக்க மோகத்தை தவிர்த்து இந்தியாவிலேயே முன்னேற வழிகாணவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை