உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் வந்துட்டேன்; கெஜ்ரிவாலும் விரைவில் வருவார்; சிசோடியா நம்பிக்கை

நான் வந்துட்டேன்; கெஜ்ரிவாலும் விரைவில் வருவார்; சிசோடியா நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறையிலிருந்து வெளியே வருவார்' என டில்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நம்பிக்கை தெரிவித்தார்.சமீபத்தில் 17 மாதங்களுக்கு பிறகு, திஹார் சிறையில் இருந்து மணிஷ் சிசோடியா விடுவிக்கப்பட்டார். பட்பர்கஞ்ச் தொகுதி மக்களை அவர் சந்தித்தார். மக்கள் சிசோடியாவுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். சில பெண்களும் அவருக்கு ராக்கி கட்டினர். அவர் உள்ளூர் கடைக்காரர்கள் மற்றும் ரிக்ஷாக்காரர்களுடன் உரையாடினார். அவரை கட்டித்தழுவி செல்பி எடுத்து மக்கள் வரவேற்றனர்.

பின்னர் அவர் பேசியதாவது:

வரும் டில்லி சட்டசபை தேர்தலில் தோல்வியடையும் வரை என்னையும், கெஜ்ரிவாலையும் எப்படியாவது போலி வழக்குகளில் சிறையில் வைத்திருக்க பா.ஜ., சதி செய்தது. எங்கள் மீது பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் மாபியாவுக்கு எதிரான வழக்குகளைப் பதிவு செய்தனர். நான் 17 மாதங்களுக்குப் பிறகு, பட்பர்கஞ்ச் பகுதியில் வசிக்கும் என் சகோதர, சகோதரிகள் சந்தித்தது மகிழ்ச்சி.ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறையிலிருந்து வெளியே வருவார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kasimani Baskaran
ஆக 18, 2024 13:36

இவன்களுக்கு பேராசை என்பது நிறையவே இருக்கிறது. அதுவும் தீம்க்கா போல ஊழல் ஒரே வருடத்தில் செய்து முடித்து விட வேண்டும் என்று கூட நினைக்கிறார்கள்.


Ramesh Sargam
ஆக 18, 2024 13:05

நினைப்பு பொழப்ப கெடுக்கும் என்பார்கள். அதுபோல இங்கேயும்...


KRISHNAN R
ஆக 18, 2024 11:43

தேசிய தியாகிகள்


Indhuindian
ஆக 18, 2024 11:31

நினைப்புதான் பொஷப்ப கெடுக்குது கெஜ்ரிவால் வெளியிலே வரணும்னு துடிக்கிறது அவர் பேர்ல இருக்கற அக்கறை இல்லை கெஜ்ரிவால் வரலேன்னா அவரோட சம்சாரத்தை முதல் மந்திரி ஆக்கிடுவாங்க அப்புறம் இவர் எப்பவும் ரன்னர் அப் தானே


Swaminathan L
ஆக 18, 2024 10:47

மறந்தும் கூட லிக்கர்கேட் ஊழல், வழக்கு, விசாரணை பற்றிப் பேசக்கூடாது. குற்றவாளி அல்ல என்று விடுதலையாகி வரவில்லை. வெறும் ஜாமீனில் வந்ததுக்கே இவ்வளவு பில்ட்அப்.


மணியன்
ஆக 18, 2024 08:38

மக்கள் 2024 தேர்தலில் டெல்லியில் 7க்கு 7 பாஜகவுக்கு கொடுத்தபின்னும் இவ்வளவு ஆட்டம் போடும் இவர்களை தொடர்ந்து மக்கள் தண்டிப்பார்கள்.அப்பட்டமாக கொள்ளையடித்துவிட்டு உத்தமர்கள் போல் நடிக்கிறார்கள்.கேஜ்ரி என்னவோ சுதந்திர போராட்டத்திற்கு சிறை சென்றது போல் பில்டப் கொடுக்கின்றனர்.இனி மக்கள் ஏமாற மாட்டார்கள்.


Premanathan Sambandam
ஆக 18, 2024 09:23

மக்கள் ஏமாற மாட்டார்கள் உங்களை நினைத்து நான் பரிதாப்படுகிறேன் நம் மக்கள் ஏமாற்றவே மற்றும் ஏமாறவே பிறந்தவர்கள் அதில் மிகச் சிறந்தவர்கள்


Sundar
ஆக 18, 2024 08:28

சுப்ரீம் கோர்ட் இருக்கற வரைக்கும் உங்கள மாதிரி ஆளுங்களுக்கு கவலை இல்லை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை