உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குரங்கு அம்மைக்கே விடை தெரியலை; சண்டிபுரா வைரஸ் பரவுது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

குரங்கு அம்மைக்கே விடை தெரியலை; சண்டிபுரா வைரஸ் பரவுது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது சண்டிபுரா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. மக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.உலக நாடுகளில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வருவதாக கூறி, சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை 2 வாரம் முன், உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போது தான் மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் செய்து வருகின்றன. இந்நிலையில் தற்போது சண்டிபுரா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. ஈ, கொசு மற்றும் உண்ணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை தொற்று. மஹாராஷ்டிராவில் சண்டிபுரா கிராமத்தில் 1965ம் ஆண்டு முதல்முறையாக இந்த தொற்று கண்டறியபட்டது. இதனால் இந்தொற்று சண்டிபுரா என்று அழைக்கப்படுகிறது. இது குறித்து, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: * இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது சண்டிபுரா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். * ஜூன் மாதம் துவக்கத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வரை மூளை அழற்சி நோயால் 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 82 பேர் உயிரிழந்தனர். * இந்தியா முழுவதும் 42 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 245 பேரில் 63 பேருக்கு சண்டிபுரா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. * 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் அல்லது நரம்பு மண்டல பாதிப்பு இருந்தால் டாக்டர்களிடம் அழைத்து செல்ல வேண்டும்.* இந்த வைரஸ் பாதித்தால் காய்ச்சல், வாந்தி, நரம்பியல் குறைபாடுகள், மூளைக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். பெரும்பாலும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். * பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் உயிரிழக்கின்றனர். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மக்கள் சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 29, 2024 20:46

மஹாபாரதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது .... கலியுகத்தில் பூகம்பம், அதிக மழைப்பொழிவு, புதுப்புது நோய்கள் பரவல், கொலை, தற்கொலை போன்ற குற்றங்கள் நடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ....


Nachiar
ஆக 29, 2024 17:05

கனடாவில் மீண்டும் கோவிட பரவுகிறது.


Murthy
ஆக 29, 2024 16:22

குரங்கு அம்மை முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது டென்மார்க்கில்.....அதனால் அதற்க்கு டென்மார்க் மங்கி பாக்ஸ் என்று பெயர் வைக்க வேண்டியதுதானே??


P. VENKATESH RAJA
ஆக 29, 2024 15:21

இது என்னங்க மக்களுக்கு வந்த சோதனையா? முதல்ல என்னன்னா கொரோனா வருது அடுத்து என்னன்னா குரங்கு வருது இப்ப என்னன்னா சண்டி புறா வந்திருக்கு வைரஸ் வேற கேட்கவே அதிருது மனசு வருந்துதே


சமீபத்திய செய்தி