உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேகம் எடுக்கும் கொரோனா: ஆயிரத்தை கடந்த நோயாளிகள் எண்ணிக்கை!

வேகம் எடுக்கும் கொரோனா: ஆயிரத்தை கடந்த நோயாளிகள் எண்ணிக்கை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000த்தை கடந்துள்ளது. கேரளா, டில்லி, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா அறிகுறிகளுடன் பலர் இருப்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்தது. பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று வரை 257 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இந் நிலையில், தற்போது மே 26ம் தேதி கணக்குபடி, நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1007 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, கேரளா, மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.கேரளாவில் 335 பேர் புதிய தொற்றாளர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக அம்மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 430 ஆக உள்ளது.இதேபோல மஹாராஷ்டிராவில் 153 பேரும், டில்லியில் 99 பேரும் கொரோனாவின் புதிய தொற்றாளர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர். இதையடுத்து, மஹாராஷ்டிராவில் 209 பேரும், டில்லியில் 104 பேரும் தற்போது வரை சிகிச்சையில் இருக்கின்றனர்.குஜராத்தில் 83 பேர், கர்நாடகா 47 பேர், உத்தரப்பிரதேசம் 15 பேர்,மேற்கு வங்கம் 12 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இன்றைய(மே 26) நிலவரப்படி ஒட்டு மொத்தமாக 1007 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
மே 26, 2025 22:12

கூட்டத்தில் செல்வதை தவிர்க்கவேண்டும். சென்றால் மாஸ்க் அணிந்து செல்லவேண்டும். அடிக்கடி கையை கழுவி சுத்தமாக இருக்கவேண்டும். முடிந்த அளவுக்கு நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.


அப்பாவி
மே 26, 2025 19:02

லாக்டவுன் கியா ஜஹா ஹைன்னு சொல்ற வரைக்கும்.பயம் வாணாம். பீதி வாணாம்.


vivek
மே 27, 2025 08:01

டாஸ்மாக் ஸ்டாக் வச்சுகோ கொத்தடிமை அப்பாவி


ஆரூர் ரங்
மே 26, 2025 18:16

இதே நேரத்தில் கொரொனா பரிசோதனை செய்வதை டாஸ்மாக்நாட்டு அரசு நிறுத்தி வைத்துள்ளது. சிறப்பு .


என்றும் இந்தியன்
மே 26, 2025 16:54

ஐயோ நாராயணா இந்த வருடம் ஆருடம் முடியும் வரை இதை கேட்கவேண்டுமா அடுத்த வருடம் தான் இதற்கு விடிவு காலமா???


Vydhes B
மே 26, 2025 16:39

Every Monsoon this happens


naranam
மே 26, 2025 16:24

இது இப்போது சாதாரண சளி காய்ச்சல் போல ஆகி விட்டது. பின் ஏன் மக்களை பயப்பட வைக்க வேண்டும்?


Anantharaman Srinivasan
மே 26, 2025 18:12

கொரோனா சாதாரண காய்ச்சல் போல ஆகி விட்டது. பின் ஏன் மக்களை பயப்பட வைக்க வேண்டும்? பாதுகாப்பிற்காகத்தான்.Naranam நீ பயப்படாதே. கூட்டம் நடுவில் ஆடிப்பாடி ஓடி விளையாடு.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 26, 2025 16:09

Expiry ஆன Sanitizer பாட்டில்களை சுத்தம் செய்து வைக்க வேண்டும். விற்காத மாஸ்க் அழகாக அடுக்கி வைக்க வேண்டும்.


vijai hindu
மே 26, 2025 15:43

ஆரம்பிச்சிட்டாங்க வியாபாரத்தை


தமிழ்வேள்
மே 26, 2025 15:25

இந்த பூச்சாண்டி தற்போது தேவையற்ற ஒன்று ..சாதாரண சளி காய்ச்சல் , இந்த தேசத்தின் உணவுமுறைகளை, பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றும் பட்சத்தில் , அதனை மீறி ஆட்கொல்லியாக பரவுதல் துர்லபம் .. மேற்கத்திய பாதி வெந்த இறைச்சி உணவுகள் மரணம் ஏற்படுத்தும் அளவு பாதிக்கலாம் ...இதற்கு பெரும் அலப்பறை , தேவையில்லை ....இஞ்சி மஞ்சள் மிளகு தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுதல் , நிலவேம்பு குடிநீர், திரிபலா சூரணம் , சிறந்த முன்தடுப்பான் ஆக செயல்படும் .... மிரண்டு போகும் அளவுக்கு ஏதும் இல்லை .


M. PALANIAPPAN, KERALA
மே 26, 2025 15:12

மீண்டும் வேதாளம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை