உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் ஆணையத்திற்கு 7 கேள்வி; கேட்கிறார் சிதம்பரம்

தேர்தல் ஆணையத்திற்கு 7 கேள்வி; கேட்கிறார் சிதம்பரம்

புதுடில்லி: பீஹார் சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சில கேள்விகளை முன்வைத்துள்ளார். பீஹார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதற்கு தேர்தல் ஆணையமும் சளைக்காமல் பதில் அளித்து வருகிறது. இதற்கு மத்தியில் நவ.,6 மற்றும் நவ.,11ம் தேதிகளில் இருகட்டங்களாக பீஹாருக்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தேர்தல் ஆணையத்திற்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; இந்திய தேர்தல் ஆணையத்தை நான் எந்த செயலுக்காகவும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. ஆனால், பீஹார் வாக்காளர் பட்டியல் குறித்த சில கேள்விகளுக்கான பதில்களை இந்திய மக்களும், பீஹார் மக்களும் தெரிந்து கொள்ள உரிமை உண்டு.* மத்திய அரசின் மதிப்பீட்டின்படி, பீஹாரில் 18 வயதை பூர்த்தி செய்தவர்களின் மக்கள் தொகை எவ்வளவு?* 18 வயதை பூர்த்தி செய்தோரின் மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேரின் பெயர்கள் பீஹார் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன? அது 90.7 சதவீதமா?* மீதமுள்ள 9.3 சதவீத 18 வயதை பூர்த்தியடைந்த மக்கள் தொகையின் நிலை என்ன? அவர்கள் ஏன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை?* வாக்காளர் பட்டியலில் உள்ள எத்தனை பெயர்கள் தகுதியில்லாதவை? அதன் எண்ணிக்கை 24,000 இருக்குமா?* வாக்காளர் பட்டியலில் உள்ள எத்தனை வீட்டு எண்கள் காலியாக உள்ளன அல்லது தகுதியில்லாதவை? அந்த எண்ணிக்கை 2,00,000க்கும் அதிகமாக இருக்குமா?* வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள எத்தனை பெயர்கள் இரட்டை அல்லது நகல் பதிவுகள்? அந்த எண்ணிக்கை தோராயமாக 5,20,000 இருக்குமா?* வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையுடன் தேர்தல் ஆணையம் (ECI) இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Madhavan
அக் 11, 2025 22:30

நல்ல வேளை இவர் இந்தியாவில் நடக்கும் பிறப்பு, இறப்பு விவரங்களை தினசரி தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டாரே


Ramesh Sargam
அக் 10, 2025 11:39

சிதம்பரத்திற்கு ஒரே ஒரு கேள்வி: நீங்கள் இந்திய நாட்டில் பிறந்து, மத்திய அமைச்சராக இருந்து, நாட்டுக்கு செய்த ஒரே ஒரு நல்ல காரியம் என்ன? இதற்கு பதில் கூறுங்கள் போதும்.


panneer selvam
அக் 09, 2025 21:40

how ignorant our only intellectual of Congress ? All these questions are not related to Election Commission , The function of election commission is to prepare electorate list based on the request of citizens on verification and conduct election in a transparent way . Election commission is nothing to do with census.


பேசும் தமிழன்
அக் 09, 2025 20:40

உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி தான்.... நமது நாட்டின் கரன்சி அச்சடிக்கும் மெஷினை பாகிஸ்தான் நாட்டுக்கு கொடுத்து.... நமது நாட்டில் 500... 1000 கள்ள நோட்டுக்கள் புலங்க காரணமாக இருந்தீர்களா இல்லையா.... அதனால் தான் மோடி அவர்கள் 500... 1000 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து... நாட்டை காப்பாற்றினார்.


srinivasan
அக் 09, 2025 19:59

குடிகேடி என திட்டுவது மாதிரி இவர் ஒரு ‘நாடு கேடி’. கெட்ட சிந்தனையாளர்


Indhuindian
அக் 09, 2025 19:27

இதுக்கெல்லாம் தேர்தல் கமிஷன் கிட்டே பதில் கிடையாது. பதினெட்டு வயசுக்கு மேலே இருக்கறவங்க எத்தனை பேர். தேர்தல் கமிஷனுக்கு எப்படி தெரியும். அரசின் மக்கள் கணக்கெடுப்புதானே இது. தேர்தல் கமிஷன் புது வாக்காளராகளை சேர்க்கனும்னா அவங்ககிட்டே இருந்து விண்ணப்பம் பெற்று, அதை சரிபார்த்து தகுதி இருக்கா இல்லையான்னுதான் பாத்து வாக்காளர்கள் பாடியல்ல சேர்க்க முடியும். யாரையோ கேட்க வேண்டியதையெல்லாம் தேர்தல் கமிஷனிடம் கேட்டால் எப்படி. நீங்க சொல்லுங்க இன்னிக்கி ராகுல் காந்தி எத்தனை காபி குடிச்சார்னு?


Iniyan
அக் 09, 2025 18:36

நீங்க பாகிஸ்தான் உளவாளிதானே??


Swaminathan L
அக் 09, 2025 17:53

மக்கள் தொகை பதிவு நிகழ்ந்து பதினான்கு ஆண்டுகள் கடந்தாகி விட்டது. இன்று, பீஹாரில் பதினெட்டு வயது ஆனவர்கள் எண்ணிக்கை எவ்வளவு என்று தோராயமாகவே சொல்ல முடியும்.பிறப்பு, இறப்பு எண்ணிக்கைகள் அனைத்தும் பதிவேற்றப்பட்டு அத்தரவுகள் தேர்தல் ஆணையத்திற்கும் கிடைத்திருக்கிறதா என்று நிச்சயமில்லை. ஆதார் அட்டை அடிப்படையில் கணக்கீடு செய்யலாம் என்றால் அதிலும் போலி அட்டைகள் ஏகப்பட்டது இருக்கிறது. முகவரி மாற்றியபின் அது பற்றி தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் தந்து வாக்குப் பதிவு கூடம், தொகுதி மாற்றம் அனைவருமே செய்து விட்டார்களா என்றால், இல்லை. இந்த நிலையில், புள்ளி விபரங்கள் பதில் தருவது எப்படிச் சாத்தியம்? தமிழகத்தில் இந்த எஸ்ஐஆர் நடவடிக்கைகள் மேற்கொண்டால் பீஹார் போலவே அல்லது அதை விட மோசமான நிலைப்பாடே உண்டாகுமோ என்னவோ?


MARUTHU PANDIAR
அக் 09, 2025 17:52

கேள்வி1 பங்களா தேசி பங்காளதேசி தான். அவனுக்கு இந்தியாவில் என்ன வேலை? என்று நீரு அமைச்சராக இருக்கும் போது கேட்டது இதே வாயால் தானா ? கேள்வி2 நீரு தானே அதிகார பூர்வ குடிமக்கள் சான்றை காஞ்சியில் நடந்த விழாவில் ஒரு பெண் மணிக்கு உம்ம கையால் வழங்கி இங்கு துவக்கி வெச் சீரு ? நினைவிருக்கா? 3 இவை பப்ளிக் டொமைனில் இன்றும் உள்ளதே? இப்போது இங்குள்ள கள்ளக் குடியேறிகளான பங்காளதேசிகளுக்கு வாங்குரிமை வேண்டும் என்று வம்பு செய்வது எந்த நோக்கத்துக்காக? 4 நீரு ரீக்கவுண்டிங் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் செய்யாதன செய்ய வெச்சு ஜெயிச்சதாக இன்னும் பேச்சிருக்கே ? எப்போதாவது அதற்கு தனிப்பட்ட மறுப்பு தெரிவித்ததுண்டா? 5 உங்க கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ரூ. 500,1000 நோட்டுக்கள் செல்லுபடியாக வைப்போம் என்று அறிக்கை விட்டீரே? 6 அப்படியானால் உமது சார்பாக பாகிஸ்தானிலோ அல்லது வேறு எங்கோ அதிக அளவில் இருப்பு வைக்கப் பட்டிருக்கிறதா? 7 நீட்டு, கச்சத்தீவு இவற்றில் உமது கூட்டணி கட்சியின் இரட்டை வேடத்தை எப்போதாவது கண்டித்ததுண்டா? இப்படி மக்கள் ஏற்கனவே பலமுறை பேசியிருக்காங்க.


K V Ramadoss
அக் 10, 2025 16:03

மருது பாண்டியரே நன்றாகக் கேட்டீர்கள்.. இதை இப்படியே ஒரு பிரிண்ட் எடுத்து, திரு சிதம்பரம் அவர்கள் அட்ரசுக்கு போஸ்ட் செய்திடுங்கள் ....


Saravanan
அக் 09, 2025 17:08

நமக்கு ஒரே கேள்வி தான். 60 லட்சம் பேர் விடுபட்டனர் என்று கூறிய உங்களிடம் குறைந்தது 60 ஆயிரம் பேராவது இருக்கணுமே? ஏன் அந்த விடுபட்டோர் தகவலை கூற மறுக்கிறீர்கள். மியான்மார் பாக்கிஸ்தான் தாய்லாந்து கொலம்பியா அல்லது பங்களாதேஷ் என்று எங்காவது தேடி சென்று அந்த பட்டியலை கொண்டு வாருங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை