உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகள் அடையாளங்கள் விரைவில் வெளியிடப்படும்: என்.ஐ.ஏ., தகவல்

பஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகள் அடையாளங்கள் விரைவில் வெளியிடப்படும்: என்.ஐ.ஏ., தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில், சரியான நேரத்தில் வெளியிடப்படும் என என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடூரமான தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் அம்பலமானது. பஹல்காமின் பட்கோலே பகுதியைச் சேர்ந்த பர்வேஸ் அஹமது மற்றும் ஹில்பார்க் பகுதியை சேர்ந்த பஷீர் அஹமது ஜோதார் ஆகிய இருவரும் என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்கள் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விசாரணையின் போது, ​​சம்பந்தப்பட்ட மூன்று பயங்கரவாதிகளின் அடையாளங்கள் குறித்த விவரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. இவர்களது வாக்குமூலங்கள், வீடியோ காட்சிகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் வெளியிடப்பட்ட ஓவியங்கள் ஆகிய ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில், சரியான நேரத்தில் வெளியிடப்படும் என என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ராமகிருஷ்ணன்
ஜூன் 24, 2025 16:14

ஏற்கனவே வெளியான படத்தில் இருந்த 4 பேர் இன்னும் கொல்லப்படவில்லையா அவர்களின் மரணம் மிக மிக கொடூரமாய் இருக்க வேண்டும். இந்து மதத்தவரை சிறுமைப்படுத்த அவர்கள் நினைக்கவே பயப்பட வேண்டும்


Gnana Subramani
ஜூன் 24, 2025 12:58

சரியான நேரம் என்றால் பீகார் தேர்தல் நேரம் தானே


தஞ்சை மன்னர்
ஜூன் 24, 2025 11:52

""லஷ்கர்-இ-தொய்பா" என்ற அமைப்பே அமெரிக்கா இந்திய கூட்டணியில் ரா அமைப்பால் உருவாக்க பட்ட பாகிஸ்தானின் நடவடிக்கையினை கண்காணிக்கவும் போட்டு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதும் தான் உண்மை இது முன்னாள் ரா ஊழியர் சொன்னது


N Sasikumar Yadhav
ஜூன் 24, 2025 12:04

பாகிஸ்தானிய பற்றாளரான உங்களிடம் ரா முன்னாள் ஊழியர் ஸ்பெஷலாக வந்து சொன்னாரா? பயங்கரவாத இஸ்லாமுக்கு எப்படி உங்களால் முட்டு கொடுக்க தோனுகிறது


Krishnamoorthy Caa
ஜூன் 24, 2025 12:35

எதுக்கு டொனால்டு ட்ரம்ப் சொன்னாரு அப்படின்னு உருட்டு. யாரு வேண்டாம்னு சொன்னா


பேசும் தமிழன்
ஜூன் 24, 2025 20:15

அவர் என்ன செய்வார்.... அவரது டிசைன் அப்படி


Ramesh Sargam
ஜூன் 24, 2025 11:47

நல்லது. கூடவே அவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்த அந்த மஹாபாவிகளின், தேசதுரோகிகளின் அடையாளங்களையும் வெளியிடவும்.


தஞ்சை மன்னர்
ஜூன் 24, 2025 11:47

இவ்வளவு நாளாக உண்மையை புரட்டி பொய்யாக மாற்றவும் நாள்கள் எடுத்து கொள்ளப்பட்டது அப்படிதானே


Prasanna Krishnan R
ஜூன் 24, 2025 11:39

அந்தக் குற்றவாளிகளைத் தூக்கிலிடுங்கள்