உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; உள்ளூர் பயங்கரவாதிகள் 14 பேர் பெயர் பட்டியல் வெளியீடு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; உள்ளூர் பயங்கரவாதிகள் 14 பேர் பெயர் பட்டியல் வெளியீடு

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 14 பேர் குறித்த தகவலை புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன.காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் தாக்குதல் நடந்த இடத்தில் என். ஐ. ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களை குறிவைத்து, உளவுத்துறை நிறுவனங்கள் தயாரித்த பயங்கரவாதிகளின் 14 பேர் பெயர் பட்டியலை உளவுத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ஐந்து பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன. உளவுத்துறை அமைப்புகள் வெளியிட்டுள்ள பயங்கரவாதிகளின் பெயர்கள்:1. அடில் ரெஹ்மான் டென்டூ (21)2. ஆசிப் அகமது ஷேக் (28) 3. அஹ்சன் அகமது ஷேக் (23) 4. ஹாரிஸ் நசீர் (20) 5. ஆமிர் நசீர் வானி (20) 6. யாவர் அகமது பட் (28) 7. ஆசிப் அகமது காண்டே (24) 8. நசீர் அகமது வானி (21) 9. ஷாஹித் அகமது குட்டாய் (27)10. ஆமிர் அகமது தர் (32)11. அட்னான் சபி தார் (35) 12. ஜுபைர் அகமது வானி (39) 13. ஹாரூன் ரஷீத் கனாய் (32) 14. ஜாகிர் அகமது கனி (29) 20-40 வயதுடைய இவர்கள் பாகிஸ்தானின் நிதியுதவியுடன் ஜம்மு காஷ்மீரில் தங்கி, பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.மேலும், இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ravicharan
ஏப் 28, 2025 15:47

This is not enough


Kumar
ஏப் 27, 2025 19:38

இவர்கள் எப்படி நுழைந்தார்கள்


Appan
ஏப் 27, 2025 07:33

காஸ்மீர் மக்கள் மனதளவில் இன்னும் இந்தியாவுடன் சேரவில்லை.. முன்னாள் சி.எம் மேஹோபா ஒரு காணொளியில் சொல்கிறார் இப்போ நாங்கள் இந்தியாவுடன் இருக்கிறோம். அதனால் இந்தியாவை ஆதரிக்கிறோம். இன்னும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து காசுமீர் சென்றால் காஸ்மீரிகள் நீங்கள் இந்தியாவில் இருந்து வருகிறீர்களா என்று கேட்பார்கள். முஸ்லிம்களின் முதல் loyalty மதம் தான். இந்திய, இந்தியாவில் வாழும் எல்லோரும் முதல் layalty இந்திய தான் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். இது பள்ளியின் தொடக்கத்திலிருந்தே சொல்லி தரணும். சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் ஆங்கிலேயர்களின் ஆட்சி முறையை தொடர்ந்தார்கள். விளைவு இந்திய வளரவில்லை.. பிஜேபி இந்திய பெருமையை கொண்டு வந்தது.. ஆனால் இவர்களும் பொருளாதாரத்தை சீனா போல் வளர்க்க முடியவில்லை.. இவர்களின் focus மதம்.இதனால் நாடு பின் நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது. பிஜேபி ஆளாத மாநிலங்களை இவர்கள் படாத பாடுபடுத்துகிறார்கள். எல்லோரும் இந்தி படிக்கணும், இந்து மதம் வாழனும் இப்படி காலத்திற்கு ஒவ்வத்தை செய்கிறார்கள். உலக அரங்கில் பொருளாதர வலிமை உள்ள நாடுகளை தான் மதிக்கிறார்கள். இதை அறிந்து பிஜேபி செயல் படனும்


sasikumaren
ஏப் 27, 2025 06:48

நாம் கணக்கெடுத்து கொண்டு மட்டும் தான் இருக்கிறோம் நேரடியாக ஒரு தீவிரவாதியையும் கொன்று போடவில்லை


naranam
ஏப் 27, 2025 01:30

தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு துணை போனவர்கள் அனைவரையும் உடனுக்குடன் கொன்று குவித்து விட வேண்டும்.


Bhakt
ஏப் 27, 2025 00:40

JK Ms are susceptible to brainwash hence all of them should be under vigilence.


எம். ஆர்
ஏப் 27, 2025 00:26

நான் எந்த கட்சியையும் சாராதவன் எந்த கட்சி தப்பு செய்தாலும் அதை எதிர்த்து என் கருத்து இருக்கும் மோடி இந்த நேரத்திலும் பீகாருக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் தீவிரவாதிகளை சும்மா விட மாட்டேன் என்று முழங்கினார் ஏன் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற காஷ்மீருக்கு செல்லவில்லை பீகாருக்கு இப்போது அங்கே சென்று இதை பேச வேண்டிய அவசியமென்ன?? இதையும் பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி ஓட்டு பிச்சை எடுக்க வேண்டுமா?? ராணுவ வீரர்களை சந்தித்து பேசி மன தைரியம் கொடுத்து உற்சாகப்படுத்தி நாட்டை பாதுகாக்க வழி செய்ய வேண்டும் இதை விட்டுவிட்டு பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று ஓட்டு பிச்சை எடுத்தால் பொது மக்களுக்கு கோபம் வராதா??


Venugopal, S
ஏப் 27, 2025 09:20

எம் ஆர் கோவை...நீ எந்த கட்சி சார்ந்தா என்ன, சாரா விட்டால் என்ன, உன் வீட்டிற்கு அருகில் எதாச்சும் நடந்து அது சும்மா சிலிண்டர் அப்டின்னு சொன்னா இங்கே வந்து கருத்து போடு. வந்துட்டான் நடு நிலை வியாதி...


Haja Kuthubdeen
ஏப் 26, 2025 22:00

மூளை சலவை செய்யப்பட்டு நஞ்சூட்டப்பட்டவர்கள்.அத்தனை பேரையும் பிடித்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்.இத்தனை பேரு இருக்கானுங்க எப்படி இவ்வளவு காலம் சுதந்திரமா நடமாட விட்டார்கள்.


Sundar Akshith
ஏப் 26, 2025 23:57

தூங்கிடாங்க 26 பேர் செத்த பிறவுதா விழித்தாங்க


sridhar
ஏப் 26, 2025 21:20

ஆம்னிபஸ் பேர் இல்லையே .


thehindu
ஏப் 26, 2025 21:07

இப்படி எதையாவது எப்போதும் கூறும் ஒன்றை இப்போதே தெரிந்த ஒன்றை திரும்ப திரும்ப கூறுவது அரசியல் பிரச்சாரத்திற்குத்தான் உதவும். இனியும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கவில்லையா?


sridhar
ஏப் 26, 2025 21:24

நீங்க பாகிஸ்தானுக்கு உள்ள போய் கண்டுபிடியுங்க . உங்க ஆளு கள்ளச்சாராயம் காய்ச்சினவங்களை , குடிநீரில் அசிங்கம் கலந்தவனை , கோவையில் குண்டு வெச்சவனை எல்லாம் உடனே உடனே கண்டுபிடிச்சாரா .


சமீபத்திய செய்தி