உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; என்ஐஏ குற்றப்பத்திரிகையில் திடுக் தகவல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; என்ஐஏ குற்றப்பத்திரிகையில் திடுக் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. முக்கிய சதிகாரராக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் ஜாட் பெயர் இடம்பெற்று உள்ளது.ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்., 22ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது.கடந்த ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்தபோது, காஷ்மீரை சேர்ந்த நபர் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தது தெரியவந்தது.இதையடுத்து குல்காமை சேர்ந்த கட்டாரியா, 26, என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், உள்ளூர்வாசிகளான பஷீர் மற்றும் பர்வேஸ் ஜோதர் கைது செய்யப்பட்டனர்.அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு உட்பட ஏழு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.1,597 பக்க குற்றப்பத்திரிகையில் பாகிஸ்தான் பயங்கரவாதி சஜித் ஜாட்டும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. மூவரும் பைசல் ஜாட் என்கிற சுலேமான் ஷா, ஹபீப் தாஹிர் என்கிற ஜிப்ரான் மற்றும் ஹம்சா ஆப்கானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கடந்த 8 மாதமாக நடத்தப்பட்ட விசாரணையில், சதித்திட்டத்தை தீட்டி, இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்து வரும் பாகிஸ்தான் செயலைஎன்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டபர்வைஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோதட் ஆகிய இருவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் தொடர்புடையவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேலும் விசாரணை தொடர்கிறது என குற்றப்பத்திரிகையில் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rajendra Kumar
டிச 16, 2025 06:07

இஸ்லாத்தில் மதப்பற்று, தீவிரவாதப்பற்று உண்டு. நாட்டுப்பற்று, மொழிப்பற்றுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. ஆகவே 90% முஸ்லிம்கள் அதன்படியே நடப்பதால் தான், உலகின் பல இடங்களில் தீவிரவாதம் முஸ்லிம்களால் நடத்தப் படுகிறது. இதற்கு தீர்வு, இஸ்லாமிய பெரியோர்கள் ஒன்றுகூடி, இளைய சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டும். மதரஸா கல்வி முறையில் மாற்றம் வேண்டும். தீவிரவாதத்திற்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்


Skywalker
டிச 15, 2025 20:25

Security in that area is not easy, it's surrounded by dense forests, mountains, etc in freezing temperatures, so anyway the military is doing it's best but one thing that shouldn't be forgotten, is that the terrorists got local help


திகழ்ஓவியன்
டிச 15, 2025 20:08

அங்கு பாதுகாப்பு இல்லாதது தான் முக்கிய காரணம் இன்னும் அந்த 4 பேர் கைது செய்ய படவில்லை


oviya vijay
டிச 15, 2025 21:50

சிலிண்டர் வெடிப்புக்கு என்ன பாதுகாப்பு? வேங்கை வயல், கள்ள சாராய மரணம், தினம் தினம் கற்பழிப்பு, கொலை, கொள்ளை, நீதிபதிக்கு மிரட்டல், நாட்டின் பிரதமரை ஆளும் கட்சியின் local rowdy மிரட்டல் இதெற்கெல்லாம் எந்த பாதுகாப்பு ஆர்ட்டிஸ்ட்...? இருநூறு க்கு ரொம்பவே முட்டு குடுக்குற


முக்கிய வீடியோ