உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆத்திரத்தை தூண்டிய பாக்., தளபதி: பரூக் அப்துல்லா கோபம்

ஆத்திரத்தை தூண்டிய பாக்., தளபதி: பரூக் அப்துல்லா கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ''பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், இரண்டு நாடு கொள்கையை பற்றி பேசி ஆத்திரத்தை தூண்டி விட்டு உள்ளார்,'' என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறினார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், பாதுகாப்பு தோல்வி மற்றும் உளவுத்துறை குறைபாடு என்பதில் சந்தேகம் இல்லை. எங்களது வாழ்க்கை சிறப்பாக செல்வது பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. இதனால் தான் பாகிஸ்தான் பஹல்காம் தாக்குதலை நடத்தியது. ஆனால், இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை எப்படி பாதிக்கும் என்பதை பாகிஸ்தான் உணரவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக முஸ்லிம்கள் தொடர்பாக பல கதைகள் நடந்து வருகின்றன. அதனை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். தற்போது, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், இரண்டு நாடு கொள்கையை பேசி ஆத்திரத்தை தூண்டி விட்டு உள்ளார். ஒரு வேளை போர் வந்தால், பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வரும். ஆனால், அதன் முடிவு கடவுளுக்கே தெரியும். இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kasimani Baskaran
மே 02, 2025 04:02

வங்கதேசத்தை உருவாக்கும் பொழுது இந்தியா பல்லாயிரம் இந்திய வீரர்களை இழந்தும் கூட 90,000 பாக் கோழைகளை கருணை அடிப்படையில் விடுவித்தது மிகப்பெரிய தவறு.


Rajan A
மே 02, 2025 03:47

Cannot trust both the families that ruled J&K. They turn to any favourable wind to retain power. Why didnt they take any action earlier, when they were in power? Genetically modified


Ravi Chandran, Pudukkottai
மே 01, 2025 22:45

என் மகன் ஜம்மு காஷ்மீர் C.M. அதுனால இந்த வாய். இல்லேன்னா என் வாய் அது வேற வாயாக இருந்திருக்கும்.


bgm
மே 01, 2025 21:52

வெளிநாட்டு பயங்கர வாதம் உள்நாட்டு பயங்கர வாதம். இரண்டுமே அழித்து ஒழிக்க பட வேண்டியது


Haja Kuthubdeen
மே 01, 2025 21:51

பரூக் அப்துல்லா பேசியுள்ளது உண்மையே...பாக்கிஸ்தான் செய்யும் வேலையால் நம்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் சந்தேகிக்க படுகிறார்கள்.மனக்கஸ்டம் ஏற்படுகிறது.ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கும் அவப்பெயரை உண்டாக்குகிறார்கள்.


Srinivasan Krishnamoorthy
மே 01, 2025 22:43

still muslims support pakistan at the cost of national interests. This is the main concern and regretful


Ramesh Sargam
மே 01, 2025 21:39

ஒருவேளை போர் வந்தால், பாகிஸ்தான் தளபதியின் தலை துண்டிக்கப்படும்.


MARUTHU PANDIAR
மே 01, 2025 21:38

இந்த மனம் திருந்திய மைந்தர்கள் எத்தினி நாளைக்கு இப்புடி இருப்பாங்களோ தெரியாது. திடீர்னு தொப்புள்கொடி பாசம் பீறிட்டு அங்கிட்டு பக்கம் டைவ் அடிக்க மாட்டாங்கன்னு கேரண்டி கிடையாது.


Ganesun Iyer
மே 01, 2025 21:34

நடிக்காத..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை