வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Salute to Indian armed forces. Not an easy job.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், கத்துவா மாவட்டத்தில் உதம்பூர் பகுதியில் ராணுவம் மற்றும் காஷ்மீர் போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்தது. இதில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து, அங்கு மோதல் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்.,அத்துமீறல்
இந்நிலையில், காஷ்மீரின் அக்னூர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார். இதற்கு இந்திய தரப்பும் பதிலடி கொடுத்தது.
Salute to Indian armed forces. Not an easy job.