உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவங்களுக்கு மோடின்னா ரொம்ப பயம்! பாக்.,கை பந்தாடிய அமித் ஷா

அவங்களுக்கு மோடின்னா ரொம்ப பயம்! பாக்.,கை பந்தாடிய அமித் ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி என்றால் ரொம்ப பயம் என்று அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு முதல் கட்ட ஓட்டுப்பதிவு கடந்த 18ம் தேதி நடந்து முடிந்தது. 2ம் கட்ட தேர்தல் வரும் 25ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் 3 நாள் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்து வரும் பா.ஜ., மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தார் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார்.அப்போது அவர் பேசியதாவது; இளைஞர்கள் கைகளில் இதுவரை துப்பாக்கிகளும், கற்களும் இருந்து வந்தன. இன்று அந்த நிலையை மாற்றிவிட்டு மடிக்கணினிகள் வழங்கி பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம்.மக்கள் பாதுகாப்புக்காக ஜம்மு பகுதியில் அதிக பதுங்கு குழிகளை அமைப்போம். 1990களில் இருந்தது போல் எல்லை தாண்டிய பயங்கரவாதம் இல்லை. அதை ஒழித்து விட்டோம். முந்தைய ஆட்சியாளர்கள் பாகிஸ்தானை கண்டு பயந்தனர். ஆனால் இப்போது பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது.அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த துணிய மாட்டார்கள். ஒரு வேளை அப்படி நடந்தால் இந்தியா தகுந்த பதிலடி தரும். தீவிரவாதத்தால் எந்த பயனும் இல்லை. இங்குள்ள இளைஞர்களை அதிக அளவில் ராணுவத்தில் சேர்க்க சிறப்பு ஆள்சேர்க்கை முகாம் ஒன்றை நடத்த உள்ளோம்.இவ்வாறு அமித் ஷா உரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

T.sthivinayagam
செப் 22, 2024 11:31

இந்த இலங்கை கேள்வி கேட்க இன்னும் தைரியம் வரவில்லையா என மக்கள் கேட்கின்றனர்


Ganesun Iyer
செப் 22, 2024 11:28

பாக்கிஸ்தான உடுங்க அது எப்ப வேனா பாத்துக்கலாம்..


RAMAKRISHNAN NATESAN
செப் 22, 2024 09:48

அடிபட்டுக்கிடக்கும் எதிரிக்கு உதவ நம்மைவிட வலுவான வேறொரு எதிரி இருக்கும் நிலையில் இப்படிப்பேசக் கூடாது ......


பாமரன்
செப் 22, 2024 09:15

. ஹைய்யோ ஹைய்யோ ஹையய்யோ...


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
செப் 22, 2024 09:41

ஏன்யா பாமரா பக்கோடாவ விட்டுட்ட ஹையோ ஹைய்யோ...


kantharvan
செப் 22, 2024 10:49

செங்கல் சைக்கோவை பார்த்து சில பேர் பயந்து ஒதுங்குகிறார்கள் என்றால் பயம் மட்டும் காரணமல்ல தெளிந்த அறிவுடையவர்கள் வீண் பிரச்சினையை துவங்க மாட்டார்கள் விளைவுகள் என்ன என்று எண்ணி பார்ப்பார்கள். தேர்தலுக்கு தேர்தல் பாக்கிஸ்தான் , இஸ்லாமியர்கள் எதிர்ப்பு ,கோவில் பிரச்சினை என்று கிளப்பி வெற்றி பெற்று விடலாம் என்று மனப்பால் குடிக்கிறது இந்த பூனைகள்.பாவம் அயோத்தியில் மண்ணை கவ்விய பிறகும் கண்களை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டதாக நினைப்பது அறியாமையின் உச்சம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை