உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்; 3 பேர் பலி

பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் தற்கொலைப்படை தாக்குதல்; 3 பேர் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் அந்நாட்டு ராணுவத் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதி ஒருவன், உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளான். இதில், 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், ராணுவத் தலைமையகத்தில் இரு பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியுள்ளனர். அங்குள்ள முக்கிய நுழைவு வாயில் பகுதியில் ஒரு தாக்குதலையும், மற்றொருவன் வளாகத்திற்குள்ளேயும் தாக்குதலை நடத்தியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், ராணுவ தலைமையகத்திற்குள் மேலும் சில பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், அங்கு ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவ தலைமையகத்திற்கு வெளியே உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை