உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர்

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, '' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

தண்டனை

டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சர்வதேச நாடுகளின் ஆதரவை நாம் பெற்றுள்ளோம். பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என ஐ.நா., தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. கடந்த 7 ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z766itz0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இருதரப்பு

பாகிஸ்தானுடனான நமது உறவு மற்றும் பிரச்னை என்பது நிச்சயம் இரு தரப்பானது. பல ஆண்டுகளாக இதே நிலைப்பாடு தொடர்கிறது. இதில் மாற்றம் ஏதும் இல்லை. பாகிஸ்தானுடன் பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரதமர் மோடி தெளிவாக கூறியுள்ளார். இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது. பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அவர்கள் மூட வேண்டும். என்னசெய்ய வேண்டும் என அவர்களுக்கு நன்றாக தெரியும். பயங்கரவாதம் குறித்து என்ன செய்ய வேண்டும் என அவர்களுடன் பேச தயாராக இருக்கிறோம்.

தயார்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதகவே இருக்கும். காஷ்மீர் குறித்து விவாதிக்க வேண்டிய விஷயம் இருக்குமே ஆனால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்து அந்நாடு வெளியேறுவதே ஆகும். இது குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறோம்.

முடிவாகவில்லை

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தை சிக்கலானது. எந்த வர்த்தக ஒப்பந்தமும் பரஸ்பரம் நலன் பயக்கும் வகையில் இருநாடுகளும் செயல்பட வேண்டும். வர்த்தக ஒப்பந்தத்தில் இதுவே எதிர்பார்க்கப்படும். அது செய்யப்படும் வரை, அது குறித்த எந்த கணிப்பும் சரியாக இருக்காது.

சேதம்

பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்ற நமது நோக்கத்தை நிறைவேற்றி விட்டோம். இந்த தாக்குதல் துவங்கிய போது, பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது மட்டுமே குறிவைத்தோம். ராணுவம் மீது அல்ல என்ற செய்தியை அனுப்பினோம். இதில் தலையிடாமல் விலகியிருக்கும் வாய்ப்பு பாகிஸ்தான் ராணுவத்திற்கு இருந்தது. ஆனால், அவர்கள் நல்ல அறிவுரையை ஏற்கவில்லை. 10ம் தேதி காலை அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட பெரிய பாதிப்பு குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடத்துவது யார் என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Saravanaperumal Thiruvadi
மே 17, 2025 11:54

இதை போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது வைத்து இருக்க வேண்டும் பயங்கர வாதிகளை ஒப்படைக்கும் வரை போர் நிறுத்தம் இல்லை என்று கூறியிருக்க வேண்டும் காலம் கடந்த பேச்சு பயனற்றது.


ராமகிருஷ்ணன்
மே 16, 2025 06:41

அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிடும் பிரச்சனைகளுக்கு எந்த காலத்திலும் பாக்கிஸ்தான் ஒத்துக் கொள்ளாது. நதிநீர் கிடைக்காமல் பாக்கிஸ்தான் மக்கள் புரட்சி செய்து அந்நாட்டு அரசை அடித்து விரட்டும் சுழ்நிலை வரும் வரை இந்தியா பொறுமையா இருக்க வேண்டும். பலூசித்தானுக்கு இந்தியா உதவக்கூடாது. அகதிகளாக வந்தாலும் ஏற்க கூடாது அந்த நாட்டு பிரச்சனையை அவர்களே சமாளிக்கட்டும். அடித்துக் கொண்டு சாவட்டும்.


ram prasath
மே 15, 2025 21:57

நல்ல முடிவு இந்திய முறை seyelpadu


Ramesh Sargam
மே 15, 2025 21:35

அவர்கள் ஒப்படைக்கவே மாட்டார்கள். நாம்தான் பயங்கரவாதிகள் கூடாரங்களை தாக்கி அவர்களை ஒட்டுமொத்தமாக எமலோகத்திற்கு அனுப்பவேண்டும். மயிலே மயிலே என்று மயிலிடம் கெஞ்சினாள் அது இரகு போடுமா?


Sudha
மே 15, 2025 18:49

பிறகு ஏன் இந்த போர் நிறுத்தம்? 26 அப்பாவிகளுக்கு உங்கள் அஞ்சலி இது தானா? இவ்வளவு தானா?


சிவம்
மே 15, 2025 20:18

வேறு என்ன செய்ய வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அழித்திருக்கிறோம். பாகிஸ்தானை முதுகெலும்பை உடைந்து நிலை குலைய செய்திருக்கிறோம். இன்னமும் செய்வோம். தண்ணீரை தடுத்து விட்டோம். வேறு என்ன செய்ய வேண்டும்


Naga Subramanian
மே 15, 2025 18:19

காயப்பட்ட மக்களின் கருத்துகளை மிகவும் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். ஜெய்ஷ்ங்கர் அவர்களுக்கு நன்றிகள் பல


Saravanaperumal Thiruvadi
மே 17, 2025 11:58

போர் நிறுத்த பேச்சு வார்த்தையின் பொழுதே இதை கூறியிருக்க வேண்டும் காலம் கடந்த பேச்சாக உள்ளது