உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய இணையதளத்தை கைப்பற்ற முயற்சி; அடங்காத பாகிஸ்தான் ஹேக்கர்கள்!

இந்திய இணையதளத்தை கைப்பற்ற முயற்சி; அடங்காத பாகிஸ்தான் ஹேக்கர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய ராணுவம் தொடர்பான இணையதளங்களை, பாகிஸ்தான் ஹேக்கர்கள் கைப்பற்ற முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கண்டறிந்த இந்திய சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள், தகுந்த முன்னெச்சரிக்கை மேற்கொண்டுள்ளனர்.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு தொடர்பான இணையதளங்கள் மீதான தாக்குதலை ஹேக்கர்கள் நடத்தியுள்ளனர்.இது தொடர்பாக இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவத் துறை சம்பந்தப்பட்ட இணையதளங்கள் மற்றும் தரவுகளை கைப்பற்ற பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர் குழுக்கள் முயற்சித்தன. ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறை பணியாளர்களின் முக்கிய தகவல்களை திருட முயற்சிகள் நடந்துள்ளன. ராணுவ பொறியாளர் சேவைகள் மற்றும் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் முக்கியமான தரவுகளை பெற முயற்சி நடந்துள்ளது.பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான 'ஆர்மர்டு வெஹிக்கிள் நிகாம் லிமிடெட்' நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் இந்தக் குழு சிதைக்க முயன்றது தெரியவந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த நிறுவன வலைத்தளம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சைபர் பாதுகாப்பு நிபுணர்களும் நிறுவனங்களும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், டிஜிட்டல் பாதுகாப்புகளை வலுப்படுத்தவும், ஊடுருவல் முயற்சிகளுக்கு எதிராக பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை