உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவர் கைது; தீவிர விசாரணை

காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவர் கைது; தீவிர விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​ மாவட்டத்தில் உள்ள எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான்- இந்தியா இடையே பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​ மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதி வழியாக இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற ஒரு பாகிஸ்தானியரை இந்திய ராணுவம் கைது செய்தது. அந்த நபருக்கு 25 வயது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் அவரது நோக்கங்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.ஏற்கனவே, பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி