உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியக்கொடியுடன் பாக்., வீரர்கள்; சொந்த ஊரில் என்னாகுமோ; நெட்டிசன்கள் கவலை!

இந்தியக்கொடியுடன் பாக்., வீரர்கள்; சொந்த ஊரில் என்னாகுமோ; நெட்டிசன்கள் கவலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா இரட்டை தங்கம் வென்றதை கொண்டாடும் வகையில், இந்திய வீரர்களுடன் இணைந்து பாகிஸ்தான் வீரர்களும் இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்தி நிற்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடந்த, 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய ஆண்கள் அணி, ஸ்லோவேனியாவையும், மகளிர் அணி அஜர்பைஜானையும் வீழ்த்தி, இரண்டு தங்க பதக்கங்களை வென்று, முதல் முறையாக வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்திய செஸ் ஒலிம்பியாட் அணி கேப்டன் ஸ்ரீநாத், வீரர் பிக்ஞானந்தா, வீராங்கனை வைஷாலி , குகேஷ் ஆகியோரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்திய அணிக்கு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=76j26icn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இரண்டு தங்க பதக்கங்களை வென்ற இந்தியாவின் வரலாற்று வெற்றி உலகளவில் மக்கள் இதயத்தில் இடம் பிடித்துள்ளது. கொண்டாட்டத்தின் போது பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்தியக் கொடியை ஏந்தி நிற்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பிரபலமான செஸ் பிளாட் பார்ம் 'செஸ்பேஸ் இந்தியா' அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில், இந்தியா கொடிகளை பாகிஸ்தான் வீரர்கள் ஏந்தி நிற்கும் வீடியோ காட்சிகளை பகிர்ந்து, 'பாகிஸ்தான் செஸ் டீம், செஸ் ஒலிம்பியாட் 2024- டீம் இந்தியா!' என பதிவிட்டுள்ளது. 'பாகிஸ்தான் வீரர்கள் இந்திய கொடியுடன் வீடியோவில் நிற்கும் காட்சியை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது' என சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு இணையதள பயனர் ஒருவர்,'நான் வீடியோ காட்சிகளை பார்க்க விரும்புகிறேன்'என பதிவிட்டுள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 'சொந்த ஊருக்கு போனால் அவர்களுக்கு என்ன கதியோ' என்றும் கவலை தெரிவித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sethuraman
செப் 28, 2024 21:28

47க்கு முன் இருந்த நிலை இனிவரும் காலங்களில் நிச்சயம் பிரிந்து சென்ற மக்கள் ஒரே தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள்,திருநாளாய் ஓர் இரவில் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.


subramanian
செப் 28, 2024 20:05

பாகிஸ்தானை எந்த விதத்திலும் எந்த காலத்திலும் எதற்காகவும் நம்ப கூடாது.


Sathyanarayanan Sathyasekaren
செப் 28, 2024 16:36

ஆனாலும் ஹினுடக்களுக்கு எதிராக மூளை சலவை பள்ளி பருவத்தில் இருந்தே செய்யப்படுகிறார்கள். பல வீடியோக்களில் அவர்களின் சாதாரண மக்களின் வெறுப்புர்ணர்வு வெளிப்படுகிறது. இங்கே இருக்கும் இஸ்லாமியர்கலே புரிந்துகொள்ளாமல் வெறுப்புணர்வுடன் உள்ளபோது பாகிஸ்தானியர்கள் மாறுவார்கள் என்று நம்புவது நாம் இன்னும் முஸ்லிம்களை புரிந்து கொள்ளவில்லை. தற்போதைய வறுமை நிலைமையில் படித்த பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விரும்பினாலும் அடிப்படை ஹிந்து வெறுப்பு, ஜிகாத் மனநிலை மாறாது.


நிக்கோல்தாம்சன்
செப் 28, 2024 15:03

சகோதரமனப்பான்மையை சொல்லி கொடுங்க அவர்களுக்கு


Barakat Ali
செப் 28, 2024 13:52

பல வருடங்களாகவே அவர்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்கள் ..... அதை வெளிப்படையாகவும் காட்டிக்கொள்கிறார்கள் ..... காரணம் சொல்லத் தேவையில்லை ....... அனைவரும் அறிந்ததே ........


M Ramachandran
செப் 28, 2024 16:11

அவர்களுக்கும் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையயை அமையாத என்ற ஒரு நப்பாசை. அங்கு மக்கள் வரி பணம் அரசியல் வதியும் ராணுவ தாழ்மையும் கூட்டு கொள்ளையில் ஈடு பட்டிருப்பதால் அத்தியாவசிய சாமான்கள் கூடா சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகா உள்ளது. இங் அவர்கள் அவசிய வைத்திய வசதிக்கு வரும் போனது நட்புடன் நாம் இலவச சிகிச்சை அளிக்கிறோம். நமக்கும் பாகிஸ்தான் மக்களுக்கும் விரோதமிலில்லை. அந்த மறைய முக ராணுவ ஆட்சியாளார்கள் அவர்கள் செல்வத்தில் கொழிக்க தீவிர வாதிகலை தலைவர்களய் வளர்த்து அனுப்பி அதை சாக்காக வைத்து அரபு நாடுகளில் கைய்யேந்தி அவர்கள் அதை பிரித்து கொள்கிறார்கள். தற்போது அரபு நாடுகள் அதை நன்ங்கு உணர்ந்து கொண்டு விட்டதால் பணம் பெயர்வதில்லை.


மோகனசுந்தரம்
செப் 28, 2024 13:06

நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக உள்ளவரை இந்தியாவின் புகழ் மென்மேலும் உயரும். அவருக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.


Kumar Kumzi
செப் 28, 2024 12:33

வாளுக்கு மதம் மாறிய உள்ளூர் கொத்தடிமைங்க பத்வா போடுவானுங்களே


சமீபத்திய செய்தி