உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பான்மசாலா உரிமையாளரின் மருமகள் டில்லியில் தற்கொலை?

 பான்மசாலா உரிமையாளரின் மருமகள் டில்லியில் தற்கொலை?

புதுடில்லி: பிரபல பான்மசாலா நிறுவனமான 'கமலா பசந்த் மற்றும் ராஜஸ்ரீ ' உரிமையாளரின் மருமகள் தீப்தி சவ்ராஷ்யா, 40, டில்லி வசந்த் விஹாரில் உள்ள வீட்டில் துாக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். டில்லியை சேர்ந்த பிரபல பான்மசாலா நிறுவனமான கமலா பசந்த் மற்றும் ராஜஸ்ரீயின் உரிமையாளர் கமல் கிஷோர். இவரது மகன் ஹர்பிரித் சவ்ராஷ்யா கடந்த 2010ல் தீப்தி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 14 வயதில் மகன் உள்ளார். தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை டில்லி வசந்த் விஹார் பகுதியில் உள்ள வீட்டில் தீப்தி சேலையால் துாக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது பற்றி அறிந்த வசந்த் விஹார் போலீசார் தீப்தி சடலத்தை மீட்டு தற்கொலையா, கொலையா என வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அந்த அறையில் இருந்து தீப்தி கைப்பட எழுதியதாக கூறப்படும் கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். தீப்தியின் சகோதரர் ரிஷப் நேற்று கூறியதாவது: தீப்தியின் கணவர் ஹர்பிரித்துக்கு வேறு பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாக என் சகோதரி என்னிடம் தெரிவித்தார். இது குறித்து கேட்ட என் சகோதரியை அவர் தாக்கியுள்ளார். அவர் தென்னிந்திய நடிகை ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே என் சகோதரியை அவர்கள் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை