மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago
தாவணகெரே; சந்தேபென்னுாரில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற ராமர் கோவிலில், 1933ல் அயோத்தியில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமர், சீதை, லட்சுமணன் பஞ்சலோக விக்ரகத்துக்கு தினமும் பூஜைகள் நடக்கின்றன.தாவணகெரே சந்தேபென்னுாரில் திறந்த வெளியில் ராமர் உற்சவ சிலை வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த இடத்தில் நந்தேட் வெங்கடராயரு என்பவர், 1933ல் கோவில் கட்டினார். அதன்பின் 1933ல் அயோத்தியில் இருந்து ராமர், சீதை, லட்சுமணன் பஞ்சலோக விக்ரகம் கொண்டு வரப்பட்டது.ராம தீர்த்தம் என அடையாளம் காணப்பட்ட குளம் அருகிலேயே ராமர் கோவில் கட்டப்பட்டது. ராம நவமியன்று ஹோமம், ரத உற்சவம், பக்தர்கள் சார்பில் அன்னதானம் நடக்கின்றன.அயோத்தியில் இன்று ராமர் கோவில் திறப்பு விழா, ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதை முன்னிட்டு, சந்தேபென்னுார் ராமர் கோவிலில், பஞ்சாமிர்த அபிஷேகம், ராம தாரக ஹோமம், பிரசாத வினியோகம் செய்யப்படுகிறது.'ராமர் கோவில் கட்டடம் 90 ஆண்டு பழமையானது. கட்டடம் சிதிலமடைந்துள்ளது; மேற்கூரை ஒழுகுகிறது. இதை பழுது பார்க்க வேண்டும்' என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2 hour(s) ago
2 hour(s) ago | 1
2 hour(s) ago