உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகாபாரதம் தொடரில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்

மகாபாரதம் தொடரில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்

புது டில்லி: மகாபாரத தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் 68, இன்று புற்றுநோயால் காலமானார்.டிவியில் பி.ஆர் சோப்ராவின் மகாபாரத தொடரில் கர்ணனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பங்கஜ் தீர். இவருக்கு நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. தொடர் சிகிச்சை அளித்து வந்த போதிலும் பலனின்றி அவர் இன்று காலமானார்.அவரது மறைவுக்கு நடிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
அக் 15, 2025 16:25

மஹாபாரத தொடரில், கர்ணனாக இவரது நடிப்பு மிகவும் அருமை. நான் மும்பையில் 1983 லிருந்து 1988 வரை இருந்தபோது இந்த மஹாபாரத தொடர் ஒளிபரப்பபப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மட்டுமே ஒளிபரப்பாகும். . எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் அந்த தொடரை விரும்பிப்பார்ப்போம். இவர் ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் பங்கஜ் தீர் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி இறைவனை வேண்டுகிறேன்.


சமீபத்திய செய்தி