உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி., கூட்டத்தில் ஜனாதிபதி உரை: 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என நம்பிக்கை

பார்லி., கூட்டத்தில் ஜனாதிபதி உரை: 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என நம்பிக்கை

புதுடில்லி: பார்லிமென்டில் நடந்த கூட்டுக் கூட்டத்தில் இன்று (ஜூன் 27) ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.பொது தேர்தல் முடிந்து முதல் கூட்டத்தொடர் என்பதால், அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்மு வாசித்தார். முன்னதாக 18வது லோக்சபா அமைந்த பிறகு முதன்முறையாக பார்லிமென்ட் வந்த ஜனாதிபதியை, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான ஜகதீப் தன்கர், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் வரவேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zcttk14d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

செங்கோல் மரியாதை

குதிரை படை சூழ ஜனாதிபதி மாளிகையில் இருந்து பார்லி., வந்த திரவுபதி முர்முவை செங்கோலுடன் அழைத்து வரப்பட்டனர். தேசிய கீதம் இசைக்கப்பட்டப்பின், ஜனாதிபதி தனது உரையை துவங்கினார். அப்போது, 18வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து எம்.பி.,க்கள் மற்றும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவுக்கும் வாழ்த்து கூறினார்.மேலும் அவர் உரையாற்றுகையில், ''லோக்சபா தேர்தலில் எதிர்மறை சக்திகளுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் தீர்ப்பு வழங்கினர். 140 கோடி இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த அவை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 27, 2024 13:24

140 கோடி மக்கள் - minus ஒரு சில தேசதுரோகிகள். அந்த தேசதுரோகிகளின் எதிர்பார்ப்புக்கள் பாக்கிஸ்தான், சீனா போன்றநாட்டு அரசால் பூர்த்தி செய்யப்படும். ஆகையால் அவர்கள் அந்த நாடுகளுக்கு இடம்பெயர்வது சிறந்தது.


மேலும் செய்திகள்