உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிறைவு பெற்றது பட்ஜெட் கூட்டத்தொடர்: பார்லி., காலவரையின்றி ஒத்திவைப்பு

நிறைவு பெற்றது பட்ஜெட் கூட்டத்தொடர்: பார்லி., காலவரையின்றி ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. பார்லி., காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு கடந்த ஜன.,31 முதல் பிப்.,13 வரை நடந்தது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 10ம் தேதி துவங்கியது. கூட்டத்தொடர் துவங்கி முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. பார்லி., காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Raj
ஏப் 04, 2025 15:35

ஹையா... லீவு விட்டாச்சு... இனி நாம கலெக்க்ஷனுக்கு நம்ம ஏரியா பக்கமா போகலாம்.....


தத்வமசி
ஏப் 04, 2025 14:18

சட்டி ஒட்டையாய் இருந்தால் என்ன? கொழுக்கட்டை வெந்தால் சரி. அது போல அமளி நடக்கட்டும், சட்டங்கள் நிறைவேறினால் சரி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை