உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; இன்று வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல்

லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; இன்று வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல்

புதுடில்லி: லோக்சபா துவங்கியதும் எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இன்று (பிப்.,03) லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் ஜனவரி 31ம் தேதி துவங்கியது. அப்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிந்தவுடன் பிப்.,3ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் இன்று (பிப்.,03) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியது. அவை கூடியதும் மஹா கும்பமேளா உயிரிழப்புகள் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது.ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் இந்த விவகாரத்தை எழுப்பலாம் என சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்டனர். 'கேள்வி நேரம் நடைபெறாமல் எதிர்கட்சிகள் இடையூறு ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது' என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

மசோதா

திருத்தப்பட்ட வக்பு வாரிய வரைவு மசோதாவுக்கு, பார்லிமென்ட் கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் பா.ஜ., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி கோரியிருந்த திருத்தங்கள் அனைத்தையும் ஓட்டெடுப்பு நடத்தி, பெரும்பான்மை அடிப்படையில் பார்லிமென்ட் கூட்டுக்குழு ஏற்றுக் கொண்டது. இந்த மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ராஜ்யசபா

அதேபோல், காலை 11 மணிக்கு ராஜ்யசபா கூடியது. அவை கூடியது மறைந்த முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Dharmavaan
பிப் 13, 2025 18:15

கூச்சல் போட்டு என்ன செய்துவிடமுடியும்.மசோதா தாக்கல் செய்யவேண்டும்


என்றும் இந்தியன்
பிப் 03, 2025 17:09

இந்த எதிரிக்கட்சிகளின் எம்பிக்களின் ஒரே செயல் லோக்சபாவில் கடும் அமளி செய்தல் மட்டுமே


Anand
பிப் 03, 2025 15:56

இங்கிருந்து சென்ற திருஷ்டி பொம்மைகள் தங்கள் தொகுதிக்காக என்ன செய்தார்கள், என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள்?


Barakat Ali
பிப் 03, 2025 15:49

கூச்சலிடும் தேசவிரோதிகளை கூட்டத்தொடர் முழுதும் சஸ்பெண்ட் செய்து சம்பளப்பிடித்தமும் செய்யணும் .....


M Ramachandran
பிப் 03, 2025 15:34

இது மாதிரி கத்துவதைய்ய ஆதிக்க மக்கி கொள்ள வேண்டும். பல மசோதாக்கலிய்ய நிறைய்ய வேற்ற வேண்டும். தமிழ்நாட்டில்சட்ட பிரிவை 356 அமல் படுத்த தீர்மானமும் நிறை வேற்ற வேண்டும். உடனேயே ஒரு கும்பல் சோம்பும் கைய்யுமா வெட்டவெளி தேடி இடம் தேடி வரிசையில் முட்டி மோதி நிக்கும்.


Kasimani Baskaran
பிப் 03, 2025 13:55

அமளி சபா என்று பெயரை மாற்றவேண்டும். இல்லை என்றால் ரௌடிகளை வெளியே தூக்கி போடவேண்டும்.


sridhar
பிப் 03, 2025 13:29

பழைய காலத்து உதவாக்கரை சட்டம் எல்லாம் தூக்கி எறியப்பட வேண்டும். ஹிந்து majority நாட்டில் எங்களுக்கே இல்லாத சலுகைகள் எல்லாம் வந்தேறிகளுக்கு எதுக்கு.


sankaranarayanan
பிப் 03, 2025 13:27

பள்ளியில் வகுப்பிற்கு செல்லாதவர்கள் எல்லாமே வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா பற்றி பேச ஆரம்பித்தால் இப்படித்தான் ஆகும் அமர்க்களம் செய்ய வேண்டுமென்றே கங்கணம் கட்டிக்கொண்டு அவையில் நுழைந்தால் அவர்களை மக்கள் என்ன செய்ய வேண்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்


ஆரூர் ரங்
பிப் 03, 2025 12:43

நிச்சயம் வெளிநடப்பு செய்வார்கள். பிரச்சினைகள் இல்லாமல் வக்ஃபு சட்டத்தை நிறைவேற்றிவிடலாம். மேலை நாடுகளில் எங்குமே முஸ்லிம்களுக்கென தனி சிவில் சட்டம், வக்ஃபு வாரியமெல்லாம் கிடையாது. இதையறிந்தே அங்கெல்லாம் குடியேற இங்குள்ள முஸ்லிம்கள் ஆசைப்படுகின்றனர். இங்கு மட்டும் எல்லாமே தனியாக ஸ்பெஷலாக வேண்டும் எனக் கேட்பது என்ன நியாயம்?


Vivekanandan Mahalingam
பிப் 03, 2025 12:40

வக்ப்பு மசோதா நிறைவேற வேண்டும் - மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல் படுத்த வேண்டும் - ஹிந்து கோவில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை