உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரீமிலேயர் வருமான உச்சவரம்பை உயர்த்த பார்லி., குழு பரிந்துரை

கிரீமிலேயர் வருமான உச்சவரம்பை உயர்த்த பார்லி., குழு பரிந்துரை

புதுடில்லி: 'இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனை கருத்தில் வைத்து, 'கிரீமிலேயர்' வருமான உச்சவரம்பில் திருத்தம் செய்வது காலத்தின் தேவை' என, பார்லிமென்ட் குழு பரிந்துரைத்துள்ளது. ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையில் மேம்பட்டு இருந்தால், 'கிரீமிலேயர்' என்று அழைக்கப்படுகின்றனர். அரசு வேலை, கல்வி உள்ளிட்ட சில இடஒதுக்கீடுகளை அவர்கள் பெற முடியாது. ஆய்வு இந்த கிரீமிலேயர் பிரிவில் உள்ளோருக்கான வருமான உச்ச வரம்பை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஆய்வு செய்வது வழக்கம். கடந்த 2017ல் 6.5 லட்சம் ரூபாயாக இருந்த ஆண்டு வருமான உச்ச வரம்பு, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன்பின் இது உயர்த்தப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதர பிற்படுத்தப்பட்டோர் நலனை காக்கும் வகையில், பா.ஜ., - எம்.பி., கணேஷ் சிங் தலைமையிலான பார்லிமென்ட் குழு இதை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின்படி எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் பற்றிய அறிக்கையை, பார்லிமென்டில் இக்குழு நேற்று தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனை காக்கும் வகையில், தற்போது வழங்கப்படும் கிரீமிலேயர் உச்சவரம்பு மிகவும் குறைவு. இதன் வாயிலாக குறிப்பிட்ட அளவிலான மக்கள் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். எனவே, தற்போதுள்ள பணவீக்கம் மற்றும் வருமான உயர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, கிரீமிலேயர் உச்சவரம்பை அதிகரிப்பது காலத்தின் தேவை. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இந்த உச்சவரம்பை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் இந்த உச்சவரம்பை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கவில்லை; சமூக பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து, இந்த உச்சவரம்பை உயர்த்துவது அவசியம். பாதிக்கப்படுவர் தற்போதைய கிரீமிலேயர் உச்சவரம்பில், குறைந்த எண்ணிக்கையிலான இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயனடைய முடியும். அரசின் நலத்திட்டங்களை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 2021 - 22ல் 58.6 லட்சமாக இருந்த நிலையில், 2023 - 24ல் 20.29 லட்சமாக குறைந்துள்ளன. எனவே, கிரீமிலேயர் உச்சவரம்பை அவ்வப்போது மாறுதலுக்கு உட்படுத்துவது அவசியம்; அவ்வாறு இல்லை எனில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

veeramani
ஆக 16, 2025 10:21

மய்ய அரசில் OBC வேலை பார்த்து ஒய்வு பெட்ரா ஒருவன் கருத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ரிசர்வேஷன் வேலைவாய்ப்பு, கல்வி, போன்றவற்றில் அவசியம் தேவை. தலித் மக்களுக்கு கிரீமை லாயர் கிடையாது. ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் ஏன் கிரீமி லாயர் எனது வாதம். பிற்படுத்தப்பட்ட மக்கள் பலர் வாழ்வாதாரத்திற்கு மிக சிரமப்படுகிறார்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு. அப்படி இருக்கையில் தலித் மக்களை போல பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் பார்க்கவேண்டும். இரண்டு பிரிவினருக்கும் கிரீமி லேயர் வேண்டாம்.


அப்பாவி
ஆக 09, 2025 19:35

கிரீமி லேயர் போய் எல்லாம் கிருமி லேயராயாச்சு.


naranam
ஆக 09, 2025 12:11

இது பொதுப் பிரிவில் உள்ள நலிந்த பிரிவினருக்கு மோடி அரசு செய்யும் துரோகம் ஆகும். இதை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்.


veeramani
ஆக 09, 2025 09:59

இந்திய நாட்டில் சிறுபான்மையினர் என அவர்களுக்கு தனித்துவம் கொடுத்து 12 சதவீதம் ஒடுக்கி சுமார் 75வருடங்கள் ஆகியும் இன்னும் ஒதிக்கீடு கொடுக்கின்றனர். ஆனால் பிற்படுத்த பட்ட ஏழை அப்பாவி மக்கள் இன்னும் மிக சிரமாப டுகின்றனர். ஆனால் இவர்களுக்கு மட்டும் வருமான வரம்பு போட்டுள்ளனர். நியாயமா ??????????????????????????????????????????? ஒன்று எவருக்கும் வருமான உச்சவரம்பு போடவேண்டாம்.. இல்லாவிட்டால் சிறுபான்மையினருக்கு வருமான வரம்பு நிர்ணயம் செய்யுங்கள். ஏன் இந்த பாகுபாடு


ஆரூர் ரங்
ஆக 09, 2025 09:29

வருமான வரம்பு குறைவாக வைக்கப்பட்டுள்ளதால் பல பணியிடங்களுக்கு ஆள் கிடைக்காமல் காலியாக உள்ளன. தாற்காலிகமாக வரம்பை அதிகரிக்கலாம்.


vadivelu
ஆக 09, 2025 07:39

அப்படி யாரேனும் இதுவரை எந்த பெரிய வணிகரோ, அரசியல்வாதியோ தமிழகத்தில் தங்களை தெரிவித்து கொண்டுள்ளாரோ. இல்லையே. நாட்கள் வரும், ஒதுக்கீடு முறைகளும் மாறும்.


சமீபத்திய செய்தி