உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லியில் அதானி விவகாரம் விவாதிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

பார்லியில் அதானி விவகாரம் விவாதிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் பலத்த எதிர்பார்ப்புடன் இன்று துவங்கியது. அமெரிக்காவில் தொழிலதிபர் கவுதம் அதானி மீது தொடரப்பட்டுள்ள லஞ்ச வழக்கு, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்கட்சிகள் எழுப்பின. இதனை தொடர்ந்து பார்லி., 2 அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா, ஒரே நாடு; ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 மசோதாக்களை நிறைவேற்ற, ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. வக்பு வாரிய திருத்த மசோதா, பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்குழு தன் அறிக்கையை கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் தாக்கல் செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு பதிவு

சூரிய சக்தி மின்சாரத்தை விற்க இந்திய அதிகாரிகளுக்கு, 2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி விவகாரத்தை காங்., - திரிணமுல் காங்., - தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள் எழுப்பினர். டில்லி காற்று மாசு, மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, ரயில் விபத்துகள் போன்ற முக்கிய பிரச்னைகளை இண்டி கூட்டணியினர் எழுப்பினர் .குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கும் நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில், தலைநகர் டில்லியில் நேற்று அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது. இதில், பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான நட்டா, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காங்., மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கவுரவ் கோகோய், தி.மு.க., - ராஜ்யசபா எம்.பி., சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பேட்டி

கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2024ம் ஆண்டு கடைசி கூட்டத் தொடர் இது. இந்த கூட்டத்தொடரை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும். நாளை 75வது அரசியலமைப்பு தினம் பார்லிமென்டில் கொண்டாடப்படும். பார்லிமென்டில் ஆக்கபூர்வமான விவாதம் நடக்கும் என்று நம்புகிறேன்.ராஜ்சபாவில் பேசிய எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே; அதானி விவகாரம் மிக முக்கியமானது . இது குறித்து விவாதிக்க வேண்டும். என்றார். இதனை திரிணாமுல் காங்., மற்றும் எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sankaranarayanan
நவ 25, 2024 19:03

பார்லியில் அதானி விவகாரம் விவாதிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல் என்பது கேட்கவெட்கக்கேடாக உள்ளது ஆந்திரா - சத்திஸ்கர் - ஒரிசா என்ற மூன்று மாநிலங்களுக்கும் தொழில் ரிதியாக அதானி க்ரீன் எனேர்ஜி பணம் கொடுத்திருக்கிறது ஆனால் இந்த மூன்று மாநிலமங்களிலும் தற்சமயம் அந்த பணம் வாங்கிய அரசு இல்லை - எவ்வளவு என்று இன்னும் வெளி வரவில்லை - ஆனால் ரூபாய் 4550 கோடியில் கமுதியில் அமைக்கப்பட்ட அதானி க்ரீன் எனேர்ஜியினால் மின்சாரம் தமிழ் நாட்டிற்கும் கிடைத்திருக்கிறது அதற்கு எவ்வளவு பணம் யாருக்கு எப்போது கொடுக்கப்பட்டது என்ற விவரம் இன்னும் வெளி வரவில்லை அதற்குள் இவர்கள் தர்ம புத்திரர்கள்போன்று பாராளுமன்றத்தை முடக்குவது எந்த விதத்தில் சிறந்தது


Kalaiselvan Periasamy
நவ 25, 2024 19:00

மல்லிகார்ஜூன் கார்கே அறிவு என்பதே கிடையாதா ? காங்கிரசுக்கு ஒட்டு போட்டவன் எல்லாம் மடையர்கள் . படித்தும் முட்டாள்கள் . காங்கிரஸ், தேசம் மற்றும் ஹிந்துக்களின் துரோகி .


என்றும் இந்தியன்
நவ 25, 2024 17:50

அமளி இல்லாமல் நானில்லை??? எந்த நேரமும் எந்த வேளையும் எனக்கு செய்ய வேண்டியது அமளி தான் நாடாளுமன்றத்தில் நாங்கள் ஆட்சிக்கு வரும் வரை என்று காங்கிரஸ் நம்புவதால்


Anand
நவ 25, 2024 15:55

தேவையில்லாமல் கூச்சலிடும் கூட்டுக்களவாணிகளின் எம்பி பதவியை பறிக்கும் சட்டத்தை கொண்டு வரவும்...


sivaraj
நவ 25, 2024 14:08

எப்போதும்போல எதிர்க்கட்சிகள் கத்தி, கூச்சலிட்டு வெளிநடப்பு செய்வார்கள். பிறகு காந்தி சிலை அடியில் தார்னா. அப்புறம் கேன்டீனில் வடை, சமோசா, டி, காபி குளிர்கால கூட்ட தொடரில் குளிர் காய்ந்து விட்டு போய் விடுவார்கள். வேஸ்ட்


Mohan
நவ 25, 2024 14:06

எங்கே அந்த அவைக்காவலர்கள் தூக்கி போடுற வெளிய அத்தனை பேரையும் போகட்டும் பாக்கிஸ்தான், இத்தாலிக்கு ..இவுனுகளல ஒன்னும் பிரயோசனம் இல்ல


Barakat Ali
நவ 25, 2024 08:35

எதிர்க்கட்சி எம் பி கைகளால் பைசா பிரயோஜனம் இருக்காது ......


Raj
நவ 25, 2024 06:12

எல்லா எம்பி களும் வருவார்கள் கூச்சல் போட்டு டீ குடித்து விட்டு, குளிர்கால கூட்ட தொடரில் குளிர் காய்ந்து விட்டு போய் விடுவார்கள்.


Srinivasan k
நவ 25, 2024 07:50

all useless indi MPs


J.V. Iyer
நவ 25, 2024 05:05

எப்போதும்போல எதிர்க்கட்சிகள் கத்தி, கூச்சலிட்டு வெளிநடப்பு செய்வார்கள். பிறகு காந்தி சிலை அடியில் தார்னா. அப்புறம் கேன்டீனில் வடை, சமோசா, டி, காபி யை உள்ளே தள்ளிவிட்டு குறட்டை. இதற்கிடையே பாஜக எல்லா மசோதாக்களையும் எளிதில் பாஸ் செய்து சட்டமாகும். பலே எங்கள் பாப்பு ராவுல் வின்சி இருக்கும்வரையில் பாஜக ஆட்சிக்கு கொண்டாட்டம்தான். தமிழக திராவிஷ எம்பீக்கள் தமிழில் உதய நிதி வாழ்க என்று கூச்சலிட்டு மகிழ்வார்கள். அதற்காகத்தானே அங்கு செல்கிறார்கள்?


Srinivasan K
நவ 25, 2024 07:50

good for nothing . is court is like our munsif court no power within us. these people will shut their mouth when trump takes over what this judge (where is going to be) after Jan 20. keduvan kedu ninaippan