உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவ.,24ல் அனைத்து கட்சி கூட்டம்; எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

நவ.,24ல் அனைத்து கட்சி கூட்டம்; எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, வரும் நவ.,24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், பார்லிமென்ட்டின் இரு அவைகளும் நவம்பர் 25ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில், பார்லி., வளாகத்தில் வரும் நவ.,24ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடக்க உள்ளது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். நவ.,24ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. பார்லி, கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது. வக்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V Gopalan
நவ 19, 2024 16:50

Its only a formality. As usual, the Indi alliances will make their maximum disturbances in both the houses, wasting the public money. It is not known as to why at all a new Parliament is constructed wasting the public exchequer. Never transact their business in a tematic way. Speaker and as well Chairman of Rajya Sabha go on request the members = please sit down, please sit down. Day by day the country is getting different kind of activities in such a way country should not achieve any development at par with China. Hence, it is high time, President should dissolve both the houses, assemblies and promulgate President Rule immediately. Enough is enough, democracy will not yield the countrys development rather will go bad to worse.


Suppan
நவ 19, 2024 16:21

வைகுண்டர் சாமியோவ் திருச்சிக்கு அருகில் உள்ள திருச்செந்துறையில் உள்ள 1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சுந்தரேஸ்வரர் கோவில் இருக்கும் நிலத்தை வக்ப் வாரியம் தன்னுடையது என்கிறது. இஸ்லாம் பிறந்ததே சுமார் 1400 வருடங்களுக்கு முன்புதான். இஸ்லாம் சென்னை ராஜதானிக்கு வந்தது எட்டாம் நூற்றாண்டில்தான். இது மட்டுமல்ல ஒட்டு மொத்த திருச்செந்துறையே தனக்கு சொந்தம் என்கிறது இந்த திருட்டு திராவிடத்தால் ஆதரிக்கப்படும் வக்ப் வாரியம். இது ஒரு உதாரணமே. இன்னும் பாராளுமன்ற கட்டிடம் , ஜனாதிபதி மாளிகை ஆகியவை அமைந்துள்ள நிலங்களும் தனக்கு சொந்தம் என்கிறது. உங்களுக்கு நிலம்/ வீடு இருந்தால் அதன் உரிமையை வக்ப் வாரியம் கொண்டாடலாம். சூதானமா இருங்க. அதனிடம் எந்த ஆவணங்களும் இல்லை. ஆனால் நீங்கள்தான் நிலம் உங்களுடையது என்று நிரூபிக்கவேண்டும். இதை ஒப்புக்கொள்வதும் கொள்ளாததும் வக்ப் வாரியத்தின் உரிமை. நீங்கள் எந்த நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்க முடியாது. இதுதான் கேடுகெட்ட காங்கிரஸ் வக்ப் சட்டத்தில் கூறியுள்ளது. இதனால்தான் தற்பொழுது இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பாஜக அரசு முயற்சிக்கிறது. ஒட்டு வங்கி அரசியலினால் காங்கிரசும் இந்தத்திருத்தங்களை இந்தி கூட்டணியும் எதிர்க்கின்றன.


தஞ்சை மன்னர்
நவ 19, 2024 12:20

இவனுங்க முன்கூட்டியே அஜெண்டாவை வைத்து கொண்டு கூட்டத்தை கூட்டி இவனுகளே ரகளை செய்துவிட்டு அப்புறம் எதிர் கட்சி மீது பழிபோடுவதே பி சே பி குரூப்புக்கு வேலை இது எதுவும் தெரியாமல் பி சே பி ஆர் எஸ் எஸ் கொடுக்கும் 50 க்கும் 100 க்கும் மாரடிக்கும் கும்பல் கருத்து சொல்லல வந்து விடும் ஆரூர் ரங் போல


Duruvesan
நவ 19, 2024 10:20

அரசியல் சாசனம், மணிப்பூர் இதை தவிர EVM மட்டும் பேசுவானுங்க. கோயில் நிலம் wakf போர்டுக்கு சொந்தம் எப்படி? விலவாசி, வேலை இன்மை, கர்நாடகல விவசாயி கஷ்டம், பொருளாதாரம் இதை பத்தி எவனும் பேச மாட்டான்


வைகுண்டேஸ்வரன்
நவ 19, 2024 14:38

எந்த கோவில் நிலம் எங்கே எப்போ எந்த வக்ப் போர்டுக்கு சொந்தம்??? சும்மா ஏதாவது மத ரீதியாக ஏதாவது எழுதி நாசமாப் போறதுல பாஜக கொத்தடிமைகளை மிஞ்சவே முடியாது. ராமர் பிறந்த இடம் னு சொல்லி வருஷக்கணக்கா களேபரம், கொலை, கல்வீச்சு எல்லாம் பண்ணி ராம் லல்லா கோவில் காட்டினாங்க. அப்புறம் என்ன ஆச்சு? அரிசி, கோதுமை, பெட்ரோல் விலையெல்லாம் குறைந்து விட்டதா? கோவில் ஒரு மழைக்கே ஒழுகுது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை