உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு; 198 பேர் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு; 198 பேர் எதிர்ப்பு

புதுடில்லி: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா லோக்சபாவில் இன்று (டிச.,17) மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மசோதாவுக்கு எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து ஆராய்ந்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3l98cq53&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்தக் குழுவினர் அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். மார்ச் மாதத்தில் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அளிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியம் என்றும், துவக்கத்தில் அதை பல கட்டங்களாக செயல்படுத்தலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும், இதற்காக பல சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மூன்று சட்டப் பிரிவுகளில் திருத்தம், 12 புதிய சட்டப் பிரிவுகள் சேர்ப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களான டில்லி, ஜம்மு - காஷ்மீர், புதுச்சேரி ஆகியவற்றுக்கான சட்டங்களில் திருத்தம் என, மொத்தம் 18 சட்ட திருத்தங்கள் செய்ய வேண்டும். இந்த அறிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் மசோதா தயாரிக்கப்பட்டது. மசோதாவுக்கு, கடந்த 12ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இந்நிலையில், இன்று (டிச.,17) லோக்சபாவில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மசோதா மீது விவாதம் நடைபெற்றது.ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப லோக்சபாவில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கூட்டுக்குழுவுக்கு அனுப்ப 269 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லோக்சபாவில் நடந்த மின்னணு ஓட்டெடுப்பை அடுத்து மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது. குளிர்கால கூட்டத் தொடர், டிச., 20ம் தேதி வரை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Raj S
டிச 17, 2024 23:52

அருமையான சட்டம்... இதன் மூலம் மாநில அரசுகள், மத்திய அரசின் தேர்வில் அவர்களின் சட்ட மன்ற ஆட்களைவைத்து எதுவும் செய்ய முடியாது... மக்கள் சுதந்திரமாக வாக்கு செலுத்தலாம்


தாமரை மலர்கிறது
டிச 17, 2024 19:50

எதிர்க்கும் எம்பிகளை சஸ்பெண்ட் செய்வது, இந்த மசோதாவை எளிதாக நிறைவேற்றுவதற்கு வழிவகுக்கும்.


AMLA ASOKAN
டிச 17, 2024 19:29

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே தேதி என்று அறிவிக்கவில்லை என்றால் தேர்தல் நடத்தி முடிக்க மூன்று மாதங்கள் ஆகும் . மேலும் இரட்டிப்பு வாக்கு இயந்திரங்கள் பல கோடிகள் செலவு செய்து வாங்க வேண்டும் . இந்தியா முழுவதும் ஒரே நாளில் தேர்தலை கண்காணிக்க 5 லட்சம் போலீசார் தேவைப்படுவார்கள் . கூட்டிக் கழித்துப் பார்த்தால் தேர்தல் செலவு குறையப்போவதில்லை . இந்த திட்டம் நல்லதென்றால் BJP தவிர வேறு எந்த கட்சியும் இந்த திட்டத்தை விரும்பவில்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் . MLA க்கள் கட்சி தாவினால் மாநில ஆட்சி கவிழ்ந்து அடுத்த 5 ஆண்டுகள் வரும் வரை ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தப்படும் . அரசியல் கட்சிகளை காட்டிலும் ஜனநாயகத்திற்குத் தான் பாதிப்பு ஏற்படும்


Raj S
டிச 17, 2024 23:48

உங்க கருத்திலிருந்து, நீங்க இன்னும் தெளிவா யோசிக்கணும்னு தெரியுது... சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் தேர்தல் ஒரு மாநிலத்தில் இரண்டு முறை நடத்தினா அதுக்கு இரண்டு முறை செலவு... நீங்க சொல்ற வாக்கு இயந்திர செலவு மட்டுமே உண்மை... அதுவும் ஒரு முறை செய்தால் போதும்...


GMM
டிச 17, 2024 18:46

ஒரே தேர்தல் எதிர் குரல் - மாநில உரிமை . மாகாணம் நீக்கி தான் மொழி மாநிலம். மாகாணம் இருந்த போது மாவட்டம், உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகம் சிறந்து இருந்ததாக கூறுவர் . மாநில கட்சிகள் அதிகாரம் துஸ்பிரயோகம், ஊழல், நிர்வாக சீர் கேட்டை அதிகரித்து சர்வாதிகார முறையை கையாண்டு வருகின்றனர். மொழி கொள்கை, மேலவை நீக்கம், லோக் அயோக் அமைப்பு முடக்கம், மத்திய விசாரணை அமைப்புகள் தடுப்பு போன்ற பல சர்வாதிகார முடிவு எடுத்து வருகின்றனர். தேர்தலுக்கும், நிர்வாக அதிகாரத்திற்கும் தொடர்பு இல்லை. எதிர்க்க தேவையில்லை. மக்களை குழப்புகின்றனர். ஒரே தேர்தல் வேண்டாம் என்றால், மீண்டும் மாகாண அமைப்பு. ஏற்குமா எதிர்க்கும் கட்சிகள் .?


Karthik
டிச 17, 2024 18:10

நிறைவேற்றப்பட வேண்டிய சட்ட மசோதா... வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன் திரு மோடி ஜி..


mukundan
டிச 17, 2024 16:56

இதன் மூலம் ஒவ்வொரு தேர்தலுக்கும் பணம் வாங்கும் மக்கள் பாதிக்கப்படுவாரே.... இதை எப்படி அனுமதிக்க முடியும்?


Kalaiselvan Periasamy
டிச 17, 2024 16:12

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் . இந்தி கூட்டணி இந்தியா தேசத்தின் களவாணிகள் இவர்களை களையெடுப்பதே இந்தியா மக்களுக்கு நல்லது . போதுமடா சாமி , இந்த மதுவுக்கும் இலவசத்திற்கும் ஆசை பட்டு இந்த களவாணிகளை தேர்தலில் ஜெயிக்க வைத்தது . தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்கள் மொழியையும் நாட்டையும் அபகரித்தவர்கள் உங்கள் இனமே இல்லாமல் செய்து விட்டு , இவர்களே தங்களை தமிழர்கள் என்று கூறிக்கொள்வார்கள் .


Rengaraj
டிச 17, 2024 15:25

ஒரு சாதாரண படிப்பறிவற்ற பாமரனுக்கு , ஏழை குடிமகனுக்கு ஜனநாயக மாண்பு, மாநில அரசின் உரிமைகள், ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் , அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆட்சி , உரிமை மீறல் , பறிபோகும் சட்டமன்ற உரிமை என்றெல்லாம் சொன்னால் கண்டிப்பாக புரியாது. பாராளுமன்றத்தில் எம்பிக்கள் கத்துவதை பார்த்தால் அவன் ரெண்டு கட்சிக்குள்ள சண்டை என்றே புரிந்துகொள்ளுவான். அவன் பேசுவதை கூட புரிந்துகொள்ள நேரம் இருக்காது. அவசியம் இருப்பதாகவும் அவனுக்கு தோன்றாது. ஏன் இப்போது இருக்கும் இளைஞர்களிடம் கூட கேட்கலாம். இதை படிக்கும் யாரவது இது பற்றி ரோட்டில் , பஸ்சில் , ரயிலில் கூட நடப்பவர்களிடம், பயணிப்பவர்களிடம் பேச்சு கொடுத்தாலே போதும். இவற்றை பற்றி அவர்களுக்கு விளக்கமாக சொல்லத்தெரியாது.மொத்தத்தில் ஆளும் பாஜக மக்களுக்கு ஒரே தேர்தல் சட்டத்தின் சாராம்சத்தை அவர்களுக்கு புரியும் விதத்தில் எடுத்துக்காட்டோடு விளக்கவேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தரும்விதமாக அடிக்கடி தேர்தல் வந்தால் செலவு அதிகம், அந்த செலவு எவ்வளவு, அந்த செலவை ஈடுகட்ட நாட்டு மக்கள் மீது கூடுதல் வரி போடவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று மட்டுமே சொன்னால் போதும். எங்கே பொருளாதார ரீதியாக சொல்லிவிட்டால் அதுவே எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பூமராங் போல திரும்பி விடுமோ என்று பாமரனுக்கு புரியாத விஷயத்தை பற்றி காட்டுக்கத்தல் போட்டு அலறுகிறார்கள். இதுதான் நிதர்சனம்.


Madras Madra
டிச 17, 2024 14:52

இது ஒரு சிறிய விஷயம் இதை இப்படி பெரிய கொடுமை போல பிட்ட போடும் எதிர் கட்சிகள் தப்பி தவறி கூட அடுத்த முறை வெற்றி பெறாதுகள் அடுத்த தேர்தல்களில் பா ஜா க தொடர் வெற்றிதான்


krishnamurthy
டிச 17, 2024 14:51

நிறைவேற்றப்படவேண்டிய மசோதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை