உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பறக்கும் பயணிகள் தமிழகத்தில் அதிகரிப்பு; கோவைக்கு முதலிடம்; சென்னைக்கு அடுத்த இடம்!

பறக்கும் பயணிகள் தமிழகத்தில் அதிகரிப்பு; கோவைக்கு முதலிடம்; சென்னைக்கு அடுத்த இடம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கடந்தாண்டை காட்டிலும், கோவையில் 6.4 சதவீதம் பேரும், சென்னையில் 5.1 சதவீதம் பேரும் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்துள்ளனர்.சொகுசான பந்தாவான பயணங்கள் என்றால் எல்லோரும் கைகாட்டுவது வானத்தில் பறக்கும் விமானங்களை தான். குழந்தைகளாகட்டும், பெரியவர்களாகட்டும், வானில் பறப்பது அவர்களுக்கு ஒரு இனிமையான அனுபவம். டிக்கெட் விலை எப்படி இருந்தாலும் வாழ்வில் ஒருமுறையேனும் வானில் விமானத்தில் பறப்பது சிலரின் வாழ்நாள் ஆசையாக கூட இருக்கலாம்.அப்படி ஒரு மோகமான பயணமான விமான பயணத்தில் பயணிகள் வருகை பதிவில் மற்ற விமான நிலையங்களை காட்டிலும் சென்னை பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதுதொடர்பான புள்ளி விவரங்களை இந்திய விமான நிலைய ஆணையம் தமது இணையத்தில் வெளியிட்டு உள்ளது.அதன் விவரம் வருமாறு: இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மட்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சர்வதேச பயணிகள் எண்ணிக்கை மட்டும் 4,86,117 பேர் ஆகும். உள்ளுர் பயணிகள் எண்ணிக்கை 13,57, 220 பேர். ஒட்டுமொத்தமாக 18,43,337 பேர் சென்னை விமான நிலையம் வந்து சென்றுள்ளனர். இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது 5.1% அதிகமாகும். சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில சர்வதேச விமான நிலையங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 2,70,013 பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர். இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 6.4% அதிகமாகும். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 1,68,668 பயணிகள் வந்து சென்றுள்ளனர். கடந்தாண்டில் இது 1,43,104 பேராக இருந்தது. ஒட்டு மொத்தமாக 17.9 சதவீதம் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு பயணி கூட வந்து செல்லவில்லை. இதுவே கடந்தாண்டு ஆகஸ்டில் 1,832 பயணிகள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.தனியார் பங்களிப்புடன் கூட்டு அடிப்படையில் செயல்படும் விமான நிலையங்களில் புதுடில்லி விமான நிலையத்தில் 63,92,435 பயணிகள் வந்து சென்றுள்ளனர். அடுத்தபடியாக மும்பை விமான நிலையத்தை 44,57,347 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். பெங்களூரு விமான நிலையத்துக்கு 33,90,189 பேரும், ஹைதராபாத் விமான நிலையத்துக்கு 23,29,653 பேரும் வந்து சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
செப் 28, 2024 20:57

விமான போக்குவரத்துத்துறை திமுகவினரிடம் இருந்தால், பெண்களுக்கு இலவச பயணம் கொடுத்து மேலும் பயணிகள் எண்ணிக்கையை கூட்டிவிடுவார்கள். நல்லவேளை அந்த துறை மத்திய அரசிடம் உள்ளது.


பாமரன்
செப் 28, 2024 20:21

நாட்டிலேயே மோசமாக பராமரிப்பு மற்றும் பயணிகள் வசதிகள் மிக மோசம் என ஒரு பிரிவை ஏற்படுத்தினால் சென்னை விமான நிலையம் ஒவ்வொரு வருடமும் முதல் பரிசை தட்டி செல்லும்... நேற்று கூட மும்பையில் இருந்து வந்த போது விமானம் தரையிறங்கி வண்டியில் ஏறி ஜிஎஸ்டி சாலை வர கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அதாவது மும்பை டூ சென்னை விமான பயண நேரம் ஆனது... பார்க்கிங் மற்றும் டாக்சி பிடிக்க மிக மிக மோசமாக திட்டமிடப்பட்ட நீண்ட பாதை... பார்க்கிங் சார்ஜ் கட்டாயம் வசூலிக்க வகை செய்ய எப்பாடு பட்டாலும் பத்து நிமிடங்களுக்கு முன் வெளியே செல்ல முடியாத படி சாலையமைப்பு... முன்பெல்லாம் சென்னையில் போக்குவரத்து அசிங்கமா ஆட்டோக்கள் மட்டுமே இருந்தன... அதற்கு இப்போ ஓலா ஊபர் வந்து விடிவுகாலம் வந்துடுச்சு... ஆனால் இந்த விமான நிலையம் இப்போ அந்த இடத்தை புடிச்சிடுச்சு... சீக்கிரம் அதானிக்கு குடுத்தாவது... உலகத்தரம் இல்லைன்னாலும் இந்திய தரத்துக்காவது கொண்டு வந்தால் நல்லாயிருக்கும்...


Rajan
செப் 28, 2024 18:55

இதுவல்லவோ முன்னேற்றம். ஏழை பாமரனும் விமானத்தில் பறக்கிறான்


அப்பாவி
செப் 28, 2024 18:55

வடக்கே சோத்துக்கு பறந்து வேலைக்காக இங்கே வர்றாங்க. இங்கேருந்து விமானத்தில் பறந்து போறாங்க.


ஆரூர் ரங்
செப் 28, 2024 20:35

குஜராத்தில் தெருத்தெருவாக இட்லி விற்கும் தமிழர்கள் அதிகம்.கேரளாவிலும் இன்னும் உடலுழைப்பு கூலி வேலை செய்கிறார்கள்.


theruvasagan
செப் 28, 2024 22:09

வடக்கத்திக்காரன் இங்க வந்து உழைச்சு சம்பாரிச்சு ஃப்ளைட்ல பறக்கறான். தன்மான டம்ளன் எந்த வேலையும் செய்யாம டாஸ்மாக் சரக்கடிச்சுட்டு போதையில் மிதக்கிறான்


அன்வின்
செப் 28, 2024 17:05

நமக்கு தநா அ போக்கு


narayanansagmailcom
செப் 28, 2024 16:58

வரும் ஆண்டுகளில் இது இன்னும் அதிகமாகும்


vadivelu
செப் 28, 2024 16:28

பெரிய அலசில் நாடு முன்னேறி இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை