உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடுவானில் விமானியின் அறைக்கதவை திறக்க முயன்ற நபர்: பயணிகள் அதிர்ச்சி

நடுவானில் விமானியின் அறைக்கதவை திறக்க முயன்ற நபர்: பயணிகள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமானியின் அறைக்கதவை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து உபியின் வாரணாசிக்கு சென்று கொண்டு இருந்தது. அப்போது பயணி ஒருவர் திடீரென விமானியின் அறையை (காக்பிட்) திறக்க முயன்றார்.பொதுவாக இந்த அறையை யாரும் திறக்க முடியாது. திறக்க வேண்டும் என்றால் ரகசிய எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு விமானி அதனை ஏற்றுக் கொண்டால் மட்டுமே கதவு திறக்கும். ஆனால், அதனை அறியாத பயணி அந்தக் கதவை திறக்க முயன்றார். விமானத்தை அவர் கடத்த முயற்சிக்கலாம் என்ற சந்தேகத்தில் கதவை திறக்க விமானி அனுமதி வழங்கவில்லை.கதவு திறக்க முடியாததை தொடர்ந்து அவரை ஊழியர்கள் இருக்கையில் அமர வைத்தனர். கழிவறை என நினைத்து கதவை திறக்க அந்தப் பயணி முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.விமானம், வாரணாசியில் தரையிறங்கியதும் அந்த பயணியையும், அவருடன் வந்தவர்களையும் பிடித்த ஊழியர்கள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களின் உடமைகளை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதன் பிறகு, கதவை திறக்க முயன்ற நபர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Varadarajan Nagarajan
செப் 22, 2025 21:14

சற்று வித்தியாசமாக தோன்றுகின்றது?


Oviya vijay
செப் 22, 2025 19:02

அவர் பெயரை வெளியிட வேண்டும். கண்டிப்பாக மூர்க்கமா க இருப்பான்


vadivelu
செப் 23, 2025 12:47

வித்தியாசமாக இருந்து இருப்பார், அவருடன் இருந்தவர்களை வைத்தும் பயந்து இருப்பார்கள். அதனால்தான் விமான ஊழியர்கள் அவரை போலீசிடம் ஒப்படடைத்து இருப்பார்கள்.


Sriniv
செப் 22, 2025 18:07

Even a certain person pulled the emergency door handle on a flight... it was told that he didnt know.


இளந்திரயன், வேலந்தாவளம்
செப் 22, 2025 17:57

விமானியின் அறைக்கதவும் restroom கதவும் அருகருகே தான் இருக்கும் புதிதாக விமானப் பயணம் மேற்கொண்டவராக இருக்கலாம்


KOVAIKARAN
செப் 22, 2025 17:21

விமானத்தில் cockpit - விமான பைலட்டின் அறை எது, டாய்லட் எது என்று தெரியாமலா இந்த பயணி விமானத்தில் பறந்தார்? அப்படி இருக்க வாய்ப்பில்லை. விமான பயணிகளின் பாதுகாப்பிற்காக cockpit க்குள் யார் வேண்டுமானாலும் நுழைய முடியாது.


Indian
செப் 22, 2025 20:11

மப்பில் இருந்திருக்க வாய்ப்பு


சமீபத்திய செய்தி